கோவிட் பரவலுடன் டிஜிட்டல் மயப்படுத்தலின் அதிகமான பயனை உணர முடிந்தது: நாமல் ராஜபக்ச
இலங்கையின் எதிர்கால பயணம் டிஜிட்டல் மயமாக்கலில் தங்கி இருப்பது மிகவும் தெளிவானது எனவும் கோவிட் பரவலுடன் டிஜிட்டல் மயப்படுத்தலின் அதிகமான பயனை நன்கு உணர்ந்துகொள்ள முடிந்ததாகவும் அமைச்சர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
கோவிட் தொற்று நோயில் இருந்து விடுபடும் போது இலங்கை ஒரு தேசமாக உலகத்துடன் கொடுக்கல், வாங்கல் செய்ய தயாராக இருக்க வேண்டும்.
கிராமங்களில் உள்ள மக்களுக்கு டிஜிட்டல் கருவிகள் மூலம் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடும் சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொடுப்பதன் மூலம் அந்த இலக்கு யதார்த்தமாக மாறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடையாள அட்டைகளை டிஜிட்டல் மயப்படுத்தி அனைத்து தகவல்களையும் உள்ளடக்கி, டிஜிட்டல் மயப்படுத்த முயற்சித்தாலும், அடையாள அட்டையில் நிதி கொடுக்கல் வாங்கல்களுக்கான வசதிகளை சேர்க்கவில்லை என்றால், அதில் பிரயோசனமில்லை எனவும் நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.



