நாட்டின் உண்மையான அபிவிருத்திக்கு ஆன்மீக வளர்ச்சியும் வேண்டும்: மஹிந்த ராஜபக்ஷ

Budget Mahinda Rajapaksa Religious and Cultural Economic Development
By Dilshan Nov 24, 2021 01:57 PM GMT
Report

நாட்டில் உண்மையான அபிவிருத்தி ஏற்பட வேண்டுமாயின் பொருளாதார அபிவிருத்தி போன்றே ஆன்மீக வளர்ச்சியும் காணப்பட வேண்டும் என பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.

2022 வரவு செலவுத் திட்டத்தில் புத்தசாசனம், சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செலவினத் தலைப்பு குறித்த விவாதத்தில் கலந்து கொண்டு இன்று (24) நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் உண்மையான அபிவிருத்தி ஏற்பட வேண்டுமாயின் பொருளாதார அபிவிருத்தி போன்றே ஆன்மீக வளர்ச்சியும் காணப்பட வேண்டும்.

மக்களை நெறிப்படுத்துதல் மற்றும் ஒழுக்கமானவர்களாக மாற்றும் பணி புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளதாக நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன்.

இந்தப் பொறுப்பை நாம் சிறப்பாக நிறைவேற்ற வேண்டும்.

இரண்டாயிரத்து ஐநூறு வருடங்களாக புத்த சாசனத்தின் முன்னேற்றத்திற்காக உழைத்த நாம், எதிர்கால சாசனத்தின் முன்னேற்றத்திற்காகவும் உழைக்க வேண்டும் என நம்புகின்றோம்.

இலங்கையின் கலாசாரம் மற்றும் நாகரீகம், தர்ம அறிவினாலும் ஒழுக்கத்தினாலும் போஷிக்கப்பட்ட சம்புத்த சாசனம் கடந்த காலங்களில் பேணப்பட்டது போன்று பேணிப் பாதுகாப்பது எமது தேசியப் பொறுப்பாக நான் கருதுகின்றேன்.

பௌத்த தர்மத்தில் மாற்றம் செய்யாது பாதுகாக்கவும், சங்க சாசனத்தைப் பாதுகாக்கவும், பௌத்த வழிபாட்டுத் தலங்களை அபிவிருத்தி செய்து பாதுகாக்கவும், விழுமியங்கள் நிறைந்த சமுதாயத்தை உருவாக்கவும் பல திட்டங்களை நடைமுறைப்படுத்த எமது அமைச்சு திட்டமிட்டுள்ளது.

பிற அனைத்து மதங்கள் தொடர்பில் செயற்படுவதும் நமது அமைச்சகத்தின் விடயப் பொறுப்பிற்குள் உள்ளடங்கும்.

அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து மதங்களையும் பாதுகாப்பது நமது பொறுப்பு.

அதன்படி, பிற அனைத்து வழிபாட்டுத் தலங்களின் வளர்ச்சிக்கும், மதகுருமார்களின் கல்வி நலனுக்காகவும் பாடுபட்டுள்ளோம்.

சமய விழுமியங்களை சமூகமயமாக்குவதற்காக அறநெறி பாடசாலை அமைப்பை வலுப்படுத்துவதற்காக பௌத்த, இந்து, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் விவகார திணைக்களங்களின் ஊடாக வருடாந்தம் பெருந்தொகையான நிதி செலவிடப்படுகிறது.

மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை மேம்படுத்தவும், பரஸ்பர ஒத்துழைப்புடன் வாழும் சமூகத்தை உருவாக்கவும் நாங்கள் இதையெல்லாம் செய்கின்றோம்.

கலாசாரம், இலக்கியம், கலைகள் ஆகியவற்றை உயர்த்த பாடுபட்டு வருகிறோம்.

அதன்படி, கலாசார அலுவல்கள் திணைக்களம், தேசிய திரைப்படக் கழகம், பொது அரங்காட்டுகை சபை மூலம் உயர்தர கலைப் படைப்புகளை உருவாக்கத் தேவையான சூழலை உருவாக்குவதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று கலைத்துறையில் ஈடுபட்டுள்ள கலைஞர்களுக்கான நலத்திட்டங்களை ஏற்படுத்தும் வேலைத்திட்டமொன்றை 2022ஆம் ஆண்டிலிருந்த தொடர்ச்சியாக முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம்.

வரலாறு, தொல்லியல் மற்றும் தேசிய பாரம்பரியம் ஆகியவை ஒரு நாட்டின் அடையாளங்களாகும். அதன்படி, தொல்பொருள் திணைக்களம், மத்திய கலாச்சார நிதியம், தேசிய அருங்காட்சியகத் துறையை மறுசீரமைத்து தேசிய அடையாளத்தை எதிர்கால சந்ததியினருக்கு உரிமையாக்கி நாம் நமது பொறுப்பை நிறைவேற்றி வருகிறோம் என்று தெரிவிக்க வேண்டும்.

ஒழுக்கமான நபரை உருவாக்குவதற்கு போதைப்பொருள் பாவனை மற்றும் பல்வேறு துஷ்பிரயோக செயற்பாடுகளில் ஈடுவடுவது என்பன தடையாக காணப்படுகின்றன.

அவ்வாறானவர்களை இனங்கண்டு, சமயப் பின்னணியின் கீழ் அவர்களுக்கு புனர்வாழ்வு அளித்து, சமூகத்துடன் இணைப்பதற்கான வேலைத்திட்டத்தை எமது அமைச்சு ஆரம்பித்துள்ளது.

இதனை 2022ம் ஆண்டிலும் தொடர்ந்து செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முழு உலகையும் பாதித்துள்ள கோவிட் சூழ்நிலையால், திட்டமிட்ட செயற்பாடுகள் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

எனினும், 2022 ஆம் ஆண்டில், எமது மற்றும் அதன் கீழ் உள்ள நிறுவனங்கள் மற்றும் தேசிய மரபுரிமைகள், அரங்குக் கலைகள் இராஜாங்க அமைச்சின் அதிகபட்ச பங்களிப்புடன் குறிப்பிட்ட மற்றும் விரும்பிய இலக்குகளை அடைவதற்கான மூலோபாய உத்திகளை பின்பற்ற திட்டமிட்டுள்ளோம்.

எனவே, இந்த விடயங்களில் எமது அமைச்சு விசேட கவனம் செலுத்தி வருகின்றது என்பதை நான் உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன் என பிரதமர் தெரிவித்துள்ளார்.  

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம்

06 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
மரண அறிவித்தல்

வாதரவத்தை, நல்லூர், Scarborough, Canada

08 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு

10 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சேமமடு, Saint-Denis, France

08 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Markham, Canada

27 Dec, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, மானிப்பாய், London, United Kingdom

31 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, North York, Canada

19 Dec, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், London, United Kingdom

10 Jan, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கொழும்பு

10 Jan, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Cheam, United Kingdom

28 Dec, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
28ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வவுனியா, கொழும்பு, நல்லூர்

09 Jan, 1997
மரண அறிவித்தல்

இணுவில், New Malden, United Kingdom

04 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, வவுனியா

10 Jan, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, நியூ யோர்க், United States, Montreal, Canada, Toronto, Canada

02 Jan, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்கன்குளம், பிரான்ஸ், France

09 Jan, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், இலங்கை, Toronto, Canada, Fairfield, United States, Rochester, United States, Annandale, United States

01 Jan, 2026
மரண அறிவித்தல்

மாதகல் கிழக்கு, London, United Kingdom

30 Dec, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, நாவற்குழி, London, United Kingdom

30 Dec, 2025
மரண அறிவித்தல்

இணுவில், கொழும்பு, London, United Kingdom

22 Dec, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், சுன்னாகம், London, United Kingdom

09 Jan, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி மேற்கு, டென்மார்க், Denmark, Milton Keynes, United Kingdom

10 Jan, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Wimbledon, United Kingdom, Thames Ditton, United Kingdom, Croydon, United Kingdom

09 Jan, 2024
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், தெஹிவளை

12 Jan, 2004
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

08 Jan, 2011
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், கொழும்பு, கல்லடி, Dartford, United Kingdom

26 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, அனலைதீவு 7ம் வட்டாரம், Neuss, Germany

09 Jan, 2022
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Zürich, Switzerland

06 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, நவாலி வடக்கு, London, United Kingdom

07 Jan, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Klang, Malaysia, யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

08 Jan, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US