இலங்கையின் போக்குவரத்து துறைக்கு உதவ தயார் ! அமெரிக்கா அறிவிப்பு
இலங்கைக்குள் போக்குவரத்து துறையில், வாய்ப்பான அனைத்து வழிகளிலும் இலங்கைக்கு உதவ தயார் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் தலைமை அரசியல்/பொருளாதார அதிகாரி சூசன் ஒர்க் (Susan Ork) இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியுடன் இன்று போக்குவரத்து அமைச்சில் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கலந்துரையாடலின் போது, அமைச்சர் வன்னியாராச்சி, நாட்டின் போக்குவரத்துத் துறையின் தரத்தை மேம்படுத்தவும், இதற்காக புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த அமைச்சகம் ஒரு நிலைப்பாட்டில் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரக வர்த்தக இணைப்பாளர் லூயிஸ் சலாஸ் மற்றும் போக்குவரத்து அமைச்சரின் தனிச் செயலாளர் காஞ்சனா ஜயரத்ன ஆகியோர் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri