அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட தயார்: பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்
நீதித்துறையின் தீர்மானத்தின்படி, பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சித்தால், அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட திருச்சபை தயாராக உள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
நீதித்துறை வழங்கிய தீர்ப்புகளின்படி அரசாங்கம் செயற்பட்டால், அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதில் தங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் கர்தினால் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கங்களின் மீது விமர்சனம்
எனினும், இந்த அரசாங்கம் நீதித்துறை வழங்கிய பல தீர்ப்புகளை புறக்கணித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ள கர்தினால், 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக இதற்கு முன்னர் பதவியில் இருந்த அரசாங்கங்களின் செயற்பாடுகளை விமர்சித்துள்ளார்.
தொடர்ந்து, முன்னைய நல்லாட்சி அரசாங்கம், தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதாகவும் தற்போதைய ஆட்சி தாக்குதலைத் திட்டமிட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தத் தவறியுள்ளதாகவும் கர்தினால் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




