நாட்டை மீட்க நாங்கள் தயார்! கோட்டாபயவும் ரணிலும் இலங்கையை எங்களிடம் ஒப்படைப்பார்களா... பகிரங்க கேள்வி
முழு நாடும் கடுமையான பொருளாதார அனர்தத்தை எதிர்நோக்கி இருக்கும் சந்தர்ப்பத்தில் அரசாங்கம் எவ்வித திட்டங்களும் இன்றி நாட்டை நிர்வகித்து வருகிறது என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
அனுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் சக்தி ஒழுங்கு செய்திருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அரசாங்கத்திடம் எந்த திட்டங்களும் இல்லை

முழு நாடும் பெரும் அனர்தத்தை எதிர்நோக்கி வருகிறது. அரசாங்கத்திடம் எந்த திட்டங்களோ தீர்வுகளோ இருப்பதாக தெரியவில்லை. கோட்டாபயவுக்கு எப்படியும் முடியாது. அவரிடம் இருக்கும் ஒருவர் காலையில் என்னை தொடர்புக்கொண்டார்.
வேறு ஒருவர் இருந்திருந்தால், நாடு இதனை விட மோசமாக இருக்கும் தான் இருப்பதால், இந்தளவுக்காவது நாடு இருக்கின்றது என கோட்டாபய நினைப்பதாக அவர் கூறினார்.
ரணில் விக்ரமசிங்க போன்றவர்கள் மரத்து போன தலைவர்கள். சர்வதேச நாணயம் நிதியம் வந்து எம்மை மீட்கும், உலக வங்கி வந்து எம்மை மீட்கும் என நினைக்கின்றனர். எனினும் அப்படி நடக்காது.
ஒரு நாடு வீழ்ச்சியடைந்தால், அந்த நாட்டை நாட்டு மக்களே மீட்டெடுக்க வேண்டும். அதற்கு சர்வதேசத்தின் உதவியை மேலதிகமாக பெற்றுக்கொள்ள வேண்டும்.
அரசாங்கத்தினால் நாட்டை மீட்டெடுக்க முடியாது

தற்போது எரிசக்தி அமைச்சர் ஒருவர் இருக்கின்றார், எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் இல்லை. கமத்தொழில் அமைச்சர் இருக்கின்றார்,வயலுக்கு உரங்கள் இல்லை. கல்வியமைச்சர் இருக்கின்றார், பாடசாலைகளை மூடுவதாக கூறுகிறார்.எதற்காக இந்த அமைச்சர்கள்.
தற்போதைய அரசாங்கத்தினால், இந்த நாட்டை மீட்டெடுக்க முடியாது. நாட்டை மீட்டெடுக்க நாங்கள் தயார். கோட்டாபயவும் ரணிலும் நாட்டை ஒப்படைத்தால், நாங்கள் பொறுப்பேற்கவும் தயாராக இருக்கின்றோம்.
நாட்டை கட்டியெழுப்பவும் தயார். எமக்கு அரசாங்கத்தை வழங்கி, நாடாளுமன்றத்தில் நாங்கள் விரும்பிய அமைச்சரவை அமைக்க சந்தர்ப்பத்தை வழங்கினால், வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தை தடுக்கும் செயல் திட்டத்திற்கு செல்ல எங்களால் முடியும் என அனுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார்.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் தொடரும் மர்மம் - தனியார் வைத்தியசாலையின் செவிலியர் வழங்கிய வாக்குமூலம்
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam