முல்லைத்தீவில் நீர்கொழும்பு நபருக்கு 46 ஏக்கரில் உப்பு சாகுபடி திட்டத்திற்கு காணி அனுமதி!
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் ,கொக்கிளாய் கடல் நீர் ஏரி பகுதியினை அண்மித்த கடற்கரைப்பகுதி நீர்கொழும்பிலுள்ள தனி நபர் ஒருவருக்கு 46 ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்வதற்கான காணி அளவீட்டு மதிப்பாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவு பிரதேச செயலாளருக்கோ மாவட்ட செயலாளருக்கோ எவ்வித அறிவிப்புக்களும் வழங்காத நிலையில் மகாவலி அபிவிருத்தி திட்டம் இந்த நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளது.
நீர் கொழும்பில் உள்ள நபர் ஒருவர் மகாவலி எல் வலயத்தில் கிரி இப்பன்வெவ ஜனகபுர பகுதியில் கொக்கிளாய் கடலுக்கு அருகில் 46 ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்வதற்கு விண்ணப்பித்துள்ளார்.
தமிழ் மக்களின் பூர்வீக பகுதி
மேலும், இத்திட்டம் தொடர்பில் கடந்த (08) ஆம் திகதி வெலிஓயா பிரதேசத்தில் நடைபெற்ற
விசேட கலந்துரையாடலில் குறித்த உப்பு உற்பத்திக்காக பரிந்துரைக்கப்பட்ட
இடங்களில் தொல்பொருள் எச்சங்கள் காணப்படுகின்றதா என்பதை உறுதிப்படுத்த மகாவலி
அதிகார சபையினால் தொல்லியல் திணைக்களத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய தொல்லியல் திணைக்களம் முல்லைத்தீவு மாவட்ட நிர்வாகம் உட்பட்ட எந்த திணைக்களத்திற்கும் அறிவிக்காத நிலையில் தமிழ் மக்களின் பூர்வீக பகுதிகளை எல்லைப்படுத்தி தொல்பொருள் இருப்பது தொடர்பான கள ஆய்வினை மேற்கொண்டு வருகின்றார்கள்.
இந்த பகுதிகளில் பெருமளவானவவை தமிழ்மக்களுக்கு சொந்தமான வயல் நிலங்கள் காணப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளார்கள்.
குறித்த நடவடிக்கை தொடர்பில் தொல்பொருள் திணைக்கள கிராம சேவகரிடம் மக்கள்
முறையிட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.

பாகிஸ்தான் ராணுவ தளங்களை தாக்கிய இந்திய விமானப்படை: BrahMos பயன்படுத்தப்பட்டிருக்க வாய்ப்பு News Lankasri
