பாடசாலை கட்டமைப்பில் பல சிக்கல்கள் : விரைவில் மாற்றம்..! அநுர உறுதி
நாட்டின் கல்வி கட்டமைப்பு முழுமையாக சீர்த்திருத்தப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்திற்கு வருகை தந்து கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், பாடசாலை கட்டமைப்பில் பல சிக்கல்கள் காணப்படுகின்றது. ஒரு ஆசிரியருக்கு 18 மாணவர்கள் இருக்கின்றார்கள் . இது ஒரு நல்ல நிலையாக இருந்தாலும் அதை ஏற்க முடியாத நிலை தற்போது எழுந்துள்ளது.
வணிக ரீதியாக எதுவும் இல்லை
எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் கல்வி முறைமை பற்றி கவனம் செலுத்தியுள்ளோம். பொருளாதார, கல்வி மறுசீரமைப்பு தேவைப்படுகின்றது.
அதிகமானவர்கள் கலந்துரையாடுகின்றார்கள் கேள்வியெழுப்பியுள்ளீர்கள் இதற்கு பதிலளிக்க நான் கடமைபட்டுள்ளேன். இது வெறுமனே பாடவிதான மாற்றம் அல்ல ,மொத்த சமூகத்தையும் பொருளாதார கட்டமைப்பை நோக்கிய மாற்றம் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
சனத்தொகை பெறுமானத்தில் 38ஆவது இடத்தில் இலங்கை இருக்கின்றது.
இது சீனாவை விட அதிகம். எமது நாட்டில் இயற்கை வளம் இருந்தாலும் வணிக ரீதியாக எதுவும் பெரிதாக இல்லை.
ஆகவே, மனித வளத்தை அதிகரிக்க அதிக கவனம் செலுத்த வேண்டும். அறிவானர்கள் வறுமையாகவும் அறிவிலிகள் வசதியாகவும் இருக்கின்றார்கள். இந்த முறை மாற்றப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




