சொந்த மண்ணில் சி.எஸ்.கே.வை வீழ்த்திய ஆர்.சி.பி!
ஐ.பி.எல். 2025 தொடரின் 8ஆவது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
நாணய சுழட்சியில் வென்ற சி.எஸ்.கே. பந்துவீச்சை தேர்வு செய்தது.

இலங்கை தேசிய மகளிர் கிரிக்கெட் அணி தலைவி, துணைத் தலைவி உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு எதிராக மனு
பெங்களூரு அணி
சி.எஸ்.கே. அணியில் மதீசா பத்திரன, ஆர்.சி.பி. அணியில் புவனேஸ்வர் குமார் இடம்பிடித்தனர் ஆகியோர் முதல் போட்டியில் களமிறங்கினர்.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 196 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பெங்களூரு அணி சார்பில் ரஜத் படிதார் 32 பந்துகளில் 51 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
பில் சால்ட் 32 ஓட்டங்களுடனும் , விராட் கோலி 31 ஓட்டங்களுடனும் , தேவ்தத் படிக்கல் 27 ஓட்டங்களுடனும் வெளியேற , டிம் டேவிட் 22 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
சி.எஸ்.கே தோல்வி
சி.எஸ்.கே. சார்பில் நூர் அகமது 3 விக்கெட்டுகளையும், பதிரன 2 விக்கெட்டுகளையும், கலீல் அகமது, அஸ்வின் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதையடுத்து, 197 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திரா மட்டும் நிதானமாக துடுப்பெடுத்தாடி 41 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
கடைசி கட்டத்தில் இறங்கிய ஜடேஜா 25 ஓட்டங்களை அணிக்காக பெற்றுக்கொடுத்தார்.
இறுதியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 146 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவியது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |