இலங்கையில் நடந்த போராட்டத்தின் பின்னணியில் றோ மற்றும் சி.ஐ.ஏ-எல்லே குணவங்ச தேரர்
இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தின் பின்னணியில் சர்வதேச சூழ்ச்சிகள் இருந்ததாக எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.
சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் நேற்று ஒளிப்பரப்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
போராட்டத்தை வழிநடத்திய கிறிஸ்தவ மதப்பிரிவு
போராட்டத்தில் நேர்மையாக ஈடுபட்டவர்களும் இருந்தனர். போர்ன் எகெய்ன் என்ற கிறிஸ்தவ குழு போராட்டத்தை வழிநடத்திய பெரிய தரப்பாக இருந்தது. அத்துடன் சர்வதேச புலம்பெயர் அமைப்புகளும் காலிமுகத்திடல் போராட்டத்திற்குள் இருந்தன. இவை போராட்டத்திற்கு நிதியுதவி அளித்தன.
நாட்டை ஸ்திரமற்ற நிலைமைக்கு கொண்டு செல்லும் தேவை சர்வதேசத்திற்கே அதிகளவில் இருந்தது. போராட்டம் நடைபெற்ற போது இந்தியாவின் றோ மற்றும் அமெரிக்காவின் சி.ஐ.ஏ. ஆகியன மிகப்பெரிய பங்களிப்பை வழங்கின. இந்த புலனாய்வு அமைப்புகள் தற்போது ஒன்றாக செயற்பட்டு வருகின்றன.
போர்ன் எகெய்ன் என்ற கிறிஸ்தவ பிரிவு 80 ஆம் ஆண்டுகளில் இலங்கைக்கு வந்த அமெரிக்க கிறிஸ்தவ பிரிவு. இந்த பிரிவு நாட்டை ஸ்திரமற்ற நிலைமைக்கு கொண்டு செல்வதில் பொறுப்பை நிறைவேற்றியது என்று எனக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருக்கும் போது இந்த கிறிஸ்தவ மதப்பிரிவு நிறுவனங்களுக்குள் நுழைந்தது. ஒருவர் வெளிவிவகார அமைச்சின் செயலாளராக பதவிக்கு வந்தார்.
மறைமுக சக்தியாக செயற்பட்ட அமெரிக்க தூதுவர்
முழு போராட்டத்தையும் முன்னெடுப்பதில் புலப்படாத சக்தியாக போர்ன் எகெய்ன் மதப் பிரிவை சேர்ந்த இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்க் செயற்பட்டார். அவர் கொரிய வம்சாவளியை சேர்ந்தவர்.
சர்வதேச ஆக்கிரமிப்பின் மூலம் போராட்டத்தை போலவே நாட்டின் வளங்களையும் கொள்ளையிட முயற்சித்தனர் எனவும் எல்லே குணவங்ச தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

Optical illusion: '7' ம் இலக்க சிவப்பு ஆப்பிள்களுக்கு மத்தியில் இருக்கும் '2'ம் இலக்க ஆப்பிள் எங்கே? Manithan

Brain Teaser Maths: கணக்கு புலிகளுக்கே சவால் விட்ட புதிர்... உங்களால் தீர்க்க முடியுமா பாருங்கள்? Manithan
