ரவிகரன் எம்.பி அரசாங்கத்திடம் விடுத்துள்ள வேண்டுகோள்
நாட்டில் அதிகரித்துள்ள சனத்தொகைக்கு ஏற்றவாறு, நாடளாவிய ரீதியில் ஆயுர்வேத, சித்த மற்றும் யுணாணி ஆகிய சுதேச வைத்திய பணியிடங்களை விஸ்தரிப்புச் செய்யுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், அரசாங்கத்திடம் வேண்டுகோள் ஒன்றினை முன்வைத்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று(18.06.2025) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“எமது நாட்டில் சுதேச வைத்தியக் கல்வியைப் பூர்த்தி செய்து வைத்தியர் தகுதியினைப் பெற்ற பல சுதேச வைத்தியர்கள் வேலைவாய்ப்பின்றி காணப்படுகின்றனர்.
சேவை செய்ய முடியாத நிலை
அவை எமது மக்களின் கலாச்சார மற்றும் பண்பாட்டுடன் இணைந்த வளர்ச்சியினாலும் சுகாதார சேவைக்கான தேவைகளினாலும் அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றது.

எமது சித்த, ஆயர்வேத மற்றும் யுனானி மருத்துவங்கள் எமது நாட்டின் கிராமப்புறங்களிலும், பொருளாதார ரீதியாக பின்தங்கிக் காணப்படும் பகுதிகளிலும், மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் நிலையான மிகப்பெரும் பங்கை வகிக்கின்றன.

எனினும், அரச சுதேச வைத்திய அதிகாரிகள் நியமனங்களின் பற்றாக்குறையினால் இவர்களது தேவை காணப்படுகின்ற சமூகங்களுக்கு சேவை செய்ய முடியாத நிலையினை ஏற்படுத்தியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri