கொக்கிளாய்- புல்மோட்டை இணைப்புப் பாலத்தை அமைக்குமாறு ரவிகரன் எம்.பி கோரிக்கை:உறுதியளித்த ஜனாதிபதி!
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாயையும், திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டையையும் இணைக்கும் பாலத்தை அமைக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் குறித்த பாலத்தினை அமைப்பதற்கு எதிர்வரும் 2026ஆம் ஆண்டிற்குரிய வரவுசெலவு திட்டத்தில் நிதிஒதுக்கீடு செய்யப்படுமென ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களிடம் உறுதியளித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (13.08.2025) இடம்பெற்ற சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் குறித்த கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைத்திருந்த நிலையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு உறுயளித்துள்ளார்.
ஜனாதிபதி உறுதி
மேலும் இந்தப் பாலம் அமைக்கப்பட்டால் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான போக்குவரத்து இலகுவாக்கப்படுவதுடன், சுற்றுலாத்துறையும் மேம்படும் என இதன்போது ரவிகரன் ஜனாதிபதிக்கு இந்தப் பாலத்தை அமைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினார்.
இதனையதையடுத்து, இந்தப் பாலத்தை அமைப்பதற்கு அடுத்த வரவுசெலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுமென ஜனாதிபதி உறுதியளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








