வடக்கின் சீரற்ற ஆசிரிய வளப் பரவலாக்கம்: ரவிகரன் எம்.பி பிரதமருக்கு கடிதம்

Ministry of Education Sri Lanka Politician Prime minister Sri Lanka Government Education
By Shan Feb 22, 2026 01:31 PM GMT
Report

வடமாகாணத்தில் நிலவும் சமச்சீரற்ற ஆசிரியர் பரம்பலால் பாதிக்கப்பட்டுள்ள வன்னி மாவட்ட மாணவர்களின் கல்வி உரிமையைப் பாதுகாக்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பிரதமருக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார்.

பிரதமருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் எழுதியுள்ள கடிதத்தில் மாணவர்கள் பாதிக்கப்படும் விடயங்கள் குறிப்பிட்டு, அதற்கான தீர்வுகளையும், கோரிக்கைகளையும் எடுத்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை நீதிமன்றில் களஞ்சியப்படுத்தப்பட்ட கஞ்சா தீயிட்டு அழிப்பு

பருத்தித்துறை நீதிமன்றில் களஞ்சியப்படுத்தப்பட்ட கஞ்சா தீயிட்டு அழிப்பு

பிரதமருக்கு அனுப்பப்பட்ட கடிதம்

மேற்படி கடிதத்தில் குறிப்பிடப்படுவதாவது,

கடந்த 2026.02.17 அன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய சட்டமூலம் (நீக்குதல்) தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில், எம்மால் முன்வைக்கப்பட்ட வன்னிப் பெருநிலப்பரப்பின் கல்வி சார் குறைபாடுகளின் தொடர் நடவடிக்கைக்குரியது.

வடக்கின் சீரற்ற ஆசிரிய வளப் பரவலாக்கம்: ரவிகரன் எம்.பி பிரதமருக்கு கடிதம் | Ravikaran Mp Request Regarding Teacher Appointment

பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பில், கல்வி அமைச்சினால் கடந்த 2026.02.02 அன்று அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

இலங்கை முழுவதும் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இப்பாரிய அளவிலான ஆசிரியர் ஆட்சேர்ப்பு முயற்சிக்கு, வன்னி தேர்தல் மாவட்டத்தை சார்பாக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கின்றேன்.

அல்லைப்பிட்டி சிறுவனின் படுகொலை: போராட்டத்தில் மயங்கி விழுந்த தாயார்!

அல்லைப்பிட்டி சிறுவனின் படுகொலை: போராட்டத்தில் மயங்கி விழுந்த தாயார்!

ஆட்சேர்ப்பு செயன்முறை

எனினும், குறித்த ஆட்சேர்ப்பு செயன்முறையில் வன்னி மாவட்டத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் கர்நாடக சங்கீதம், இந்துநாகரீக பாடங்களுக்குரிய ஆசிரியர் பற்றாக்குறை உரிய முறையில் கருத்திற் கொள்ளப்படாமை குறித்த தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.

இந்து நாகரீக பாடத்தில் வடமாகாணத்தில் 75% ஆசிரியர்களே காணப்படுவதாக வடமாகாணக் கல்வித் திணைக்கள புள்ளிவிபரம் சுட்டிக்காட்டுகிறது.

வடக்கின் சீரற்ற ஆசிரிய வளப் பரவலாக்கம்: ரவிகரன் எம்.பி பிரதமருக்கு கடிதம் | Ravikaran Mp Request Regarding Teacher Appointment

மேலும் இப்பற்றாக்குறை வன்னிப்பிராந்தியத்தில் உள்ள 6 கல்வி வலயங்களில் மேலும் பின்னடைவான பற்றாக்குறையை காட்டுகிறது.

குறிப்பாக, மடு 40%, முல்லைத்தீவு மற்றும் துணுக்காய் - 50%. பதிவுகளின் அடிப்படையில் வடமாகாணத்தில் 32 ஆசிரியர்கள் இந்துநாகரீக பாடத்தில் பற்றாக்குறையாக காணப்படுகின்றனர்.

விபத்துக்குள்ளான நண்பனைப் பார்க்கச் சென்ற இளைஞன் பரிதாப மரணம்!

விபத்துக்குள்ளான நண்பனைப் பார்க்கச் சென்ற இளைஞன் பரிதாப மரணம்!

ஆசிரியர்கள் பற்றாக்குறை

மேலும், கர்நாடக சங்கீத பாடத்தில், வடமாகாணத்தில் ஆசிரியர்கள் மிகையாக உள்ள போதும் சில ஆண்டுகளாக தொடர்ந்தும் வன்னிமாவட்டத்தில் உள்ள 6 கல்வி வலயங்களிலும் மேற்படி பாடத்திற்கு ஆசிரியர்கள் பற்றாக்குறையாக காணப்படுகின்றனர்.

(மடு 38%, வவுனியா வடக்கு 43%). யாழ்ப்பாணத்தில் மேற்படி பாடத்திற்கு 81 ஆசிரியர்கள் மிகையாக உள்ள போதும் வன்னி மாவட்டத்தில் 46 ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ளனர்.

வடக்கின் சீரற்ற ஆசிரிய வளப் பரவலாக்கம்: ரவிகரன் எம்.பி பிரதமருக்கு கடிதம் | Ravikaran Mp Request Regarding Teacher Appointment

யாழ்ப்பாணத்தில் மேற்படி பாடத்திற்கு மிகையாக உள்ள ஆசிரியர்கள் ஆரம்பக்கல்வியைக் கற்பிப்பதற்கு வழிப்படுத்தப்படுவதையும் அறியமுடிகிறது. இந்நிலையில் வன்னி பிராந்தியத்தில் உள்ள பிள்ளைகள், மேற்படி பாடத்தைக் கற்பதற்கு ஆசிரியர்கள் இன்றி கர்நாடக சங்கீத பாடத்தை அழகியல் பாடங்களில் தெரிய இயலாத நிலையில் உள்ளனர்.

எனவே, வடமாகாணத்தில் நிலவும் சமச்சீரற்ற ஆசிரியர் பரம்பலால் பாதிக்கப்பட்டுள்ள வன்னி மாவட்ட மாணவர்களின் கல்வி உரிமையைப் பாதுகாக்கும் வகையில், வன்னி தேர்தல் மாவட்டத்தில் தொடர்ச்சியாக காணப்படும் கர்நாடக சங்கீத ஆசிரியர் பற்றாக்குறைக்கும் வடமாகாணம் முழுவதும் காணப்படும் இந்து நாகரீக ஆசிரியர் பற்றாக்குறைக்கும் போதுமான ஆசிரியர் வளத்தை வழங்குவதற்கான பொருத்தமான மற்றும் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தங்களைப் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

விண்ணப்பங்கள் கோரல்

இத்தகைய சூழலில் கடந்த 18.02.2026 வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்துநாகரீகப் பாடத்திற்கு ஆசிரியர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.

அத்துடன், கடந்த 20.02.2026அன்று நாடாளுமன்ற குழு அறையில் இடம்பெற்ற கல்வி, ஊழியப்படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுக்கூட்டத்தில் வடமாகாணத்திலுள்ள சமச்சீரரற்ற ஆசிரியவளப் பரவலாக்கத்தை சீர்ப்படுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் வலியுறுத்தப்பட்ட நிலையில், வடக்குமாகாண ஆளுநர் ஊடாக குறித்த சமச்சீரற்ற ஆசிரியவளப் பரவலாக்கத்தைச் சீர்ப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

GalleryGalleryGallery
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US