மக்களின் குறைகளைக் கேட்டறிந்த ரவிகரன் எம்.பி
முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு பிரதேசசெயலகப் பிரிவிற்குட்பட்ட சிராட்டிகுளம் பகுதியில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் (T. Raviharan) மக்கள் குறைகேள் சந்திப்பொன்றை நடாத்தியுள்ளார்.
குறித்த கிராமமானது முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்புறக் கிராமம் என்பதுடன், வெள்ள அனர்த்தத்தின்போது இந்தக் கிராமத்திற்குச் செல்வதற்கான போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டிருந்த நிலையிலேயே ரவிகரன் இந்த சந்திப்பை நிகழ்த்தியுள்ளார்.
சந்திப்பில் சமூக செயற்பாட்டாளர்கள்
இதன்போது கிராமத்திற்குச் செல்லும் பிரதான வீதிச்சீரமைப்பு, பொதுப் போக்குவரத்துப் பிரச்சினை, வனவளத் திணைக்களத்தால் மக்களின் காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளமை உள்ளிட்ட விடயங்கள் மக்களால் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

அந்தவகையில் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்த நாடாளுமன்ற உறுப்பினர், குறித்த பிரச்சினைகள் தொடர்பான கோரிக்கைக் கடிதங்களை தனித்தனியே தன்னிடம் கையளிக்குமாறு தெரிவித்தார்.
மேலும், உரிய தரப்பினருடன் பேசி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டார்.
இந்த மக்கள் சந்திப்பில் சமூக செயற்பாட்டாளர்கள் நடாளுமன்ற உறுப்பினருடன் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri