பாரிய வெள்ள அனர்த்தங்களுக்கான காரணத்தை விளக்கும் ரவிகரன் எம்.பி
வடிகாலமைப்புகள் சீரின்மையே பாரிய வெள்ள அனர்த்தத்திற்கு காரணம் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் அனர்த்த நிலமைகள் குறித்து ஆராய்வதற்காக நேற்று (28.11.2024) இடம்பெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“வன்னியில் அதிக இடங்களில் வெள்ளம் ஏற்பட்டமைக்கு வடிகாலமைப்பு சீரின்மையே காரணம்.
உரிய நடவடிக்கை
இந்த விடயத்தில் உரிய திணைக்களங்கள் வடிகாலமைப்பு விடயத்தில் அதிக கவனத்துடன் செயற்பட வேண்டும்.

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவு வழங்குவதோடு நிவாரணங்கள் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பார்த்துவிட்டு முதல் விமர்சனம் சொன்ன தெலுங்கு தயாரிப்பாளர்.. படம் எப்படி இருக்கு? Cineulagam
அந்த வலியும், வேதனையும்.. காதல் முறிவு மற்றும் காதலரால் செய்யப்பட்ட துன்புறுத்தல்களை கூறிய நடிகை அனுபமா Cineulagam
ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள் News Lankasri