ஈஸ்டர் தாக்குதல் குறித்து போலி செய்திகள் பகிரப்படுவதாக குற்றச்சாட்டு
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல் விசாரணைகள் தொடர்பில் போலியான தகவல்கள் பகிரப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல்களின் பின்னணியில் இந்தியா செயற்பட்டதாக பகிரப்படும் தகவல்களில் உண்மை இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயர்நிலை பதவிகளுக்கான நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் முன்னிலையான பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன தாக்குதல்களின் பின்னணியில் இந்தியா செயற்பட்டதாக கூறினார் என வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போலி செய்திகள்
இவ்வாறு வெளியிடப்பட்ட செய்திகளை முற்றும் முழுதாக நிராகரிப்பதாகவும் இவற்றில் எவ்வித உண்மையும் கிடையாது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு போலியான செய்திகளை பகிர்வோர் தொடர்பில் விசாரணை நடத்துவது நடத்துமாறு பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும் அவ்வாறானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இந்த விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றில் கருத்து வெளியிடப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இது தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார்.
நேற்றைய தினம் உயர்நிலை பதவி குறித்த நாடாளுமன்ற செயற்குழுவில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரட்ன தகவல்களை வழங்கி இருந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல்
நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி அடையாளம் கண்டதாக ரவி செனவிரட்ன கூறினார் என தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த தாக்குதலின் பின்னணியில் இந்தியா செயற்பட்டதாக அவர் கூறியதாக தமக்கு நினைவில்லை என தெரிவித்துள்ளார்.
இந்த தகவல்களை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உரிய தரப்பினருக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
உயர்நிலை பதவி குறித்த குழுவில் பேசப்பட்ட விவகாரங்களை டுவிட்டரில் பதிவிடுவது பொருத்தமற்றது என தயாசிறி ஜயசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 4 நாட்கள் முன்

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri

சீரியல் நாயகர்கள் அனைவரும் ஒரே மேடையில், அமர்க்களமான அரங்கம்... ஜீ தமிழ் குடும்ப விருதுகள் முன்னோட்டம் Cineulagam

வீட்டைவிட்டு கிளம்பும் முன் கோமதிக்காக மீனா செய்த காரியம், ஆனால் செந்தில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
