ரணிலின் ஆட்சியில் ரவி கருணாநாயக்கவுக்கு வழங்கப்படவுள்ள முக்கிய பதவி
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியானது ரவி கருணாநாயக்கவுக்கு பிரதமர் பதவியை வழங்கும் திட்டமிடலின் ஒரு அங்கம் என அரச வட்டாரங்களில் குற்றம் சுமத்தப்படுகிறது.
ஜனாதிபதி தேர்தலில் ரணில் போட்டியிடுவார் என்றும் அது ஐக்கிய தேசிய கட்சியிலேயோ, அல்லது சுயேட்சையாகவோ என்ற ரவி கருணாநாயக்கவின் எதிர்வுகள் தற்போது நடைமுறையாகியுள்ளன.
இலங்கையின் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, 2016 ஆம் ஆண்டு திறைசேரி பிணைமுறி மோசடி வழக்கில் 22 குற்றச்சாட்டுகளில் சந்தேகநபராக பெயரிடப்பட்டவராவார்.
ரவி கருணாநாயக்க
இவ்வாறான ஒரு பின்னணியில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கிய அவருக்கு வெற்றிவாய்ப்பென்பது மக்களால் இல்லாது செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியில் அரசியலில் பெரிதாக பேசப்படாத அவரின் பெயர் குறுகிய கால இடைவெளியில், அதாவது கோட்டபாய வெளியேற்றப்பட்டு ரணில் அந்த பொறுப்பை தக்க வைத்த பின்னர் ரவி கருணாநாயக்கவின் சத்தங்கள் வெளிவர ஆரம்பித்தன.
ரணில் பங்கேற்கும் மேடைகளில் ரவி கருணாநாயக்கவுக்கு உரையாற்றுவதற்கு வாய்ப்பளிக்கப்படுவதும், ஜனாதிபதி மீண்டும் அவரை அரசியலுக்கு கொண்டு வர திட்டமிடத்துவதாகவும் கூறப்பட்டது.
இதன் தொடர்ச்சியிலேயே நேற்றைய தினம் சஜித் தரப்பின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம். மரிக்கார் தெரிவித்த விடயம் பேசுபொருளாகியுள்ளது.
மரிக்கார்
இது தொடர்பில் மரிக்கார் தெரிவித்த கருத்தானது பின்வருமாறு அமைந்திருந்தது.
''ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிப்பதானது புதிய அரசாங்கத்தில் பிரதமராகும் நம்பிக்கையில் இருக்கும் ரவி கருணாநாயக்கவுக்குக் கொடுக்கப்படும் வாக்குகளாகும் இதன் நகரவே தற்போது முன்னெடுக்கப்படுகிறது.
மதுபான அனுமதி பத்திரத்துக்காகவும் பணப்பையை மாற்றிக் கொள்ளும் நோக்கிலேயே தற்போதைய கட்சித்தாவல்கள் இங்கு இடம்பெறுகிறது.
செப்டெம்பர் (21) இறுதிக்குள் நாட்டின் பெரும்பான்மையான மக்களின் நம்பிக்கையுடன் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதை யாராலும் மாற்ற இயலாது" என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |