நாடாளுமன்றில் நீண்ட நேரம் காந்திருந்த ரவி கருணாநாயக்க
நாடாளுமன்றில் ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பிய ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் ரவி கருணாநாயக்கவை சபாநாயகர் பேச விடாததால் நீண்ட நேரம் காத்திருந்துள்ளார்.
இதனையடுத்து பிரதி சபாநாயகர் அவருக்கு உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கியுள்ளார்.
பணச் சூதாட்ட ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையை நிறுவுவதற்கான சட்ட மூலம் தொடர்பான விவாதத்தில் தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த உரையாற்றிக் கொண்டிருந்த போது, அரசாங்கம் பணம் அச்சடிக்கவில்லை என்ற கருத்தை வெளியிட்டார்.
ரவி கருணாநாயக்கவுக்கு சந்தர்ப்பம்
இதனையடுத்து ரவி கருணாநாயக்க ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பினார், ஆனால் ஒழுங்குப் பிரச்சினை ஒன்று இல்லை என தெரிவித்த சபாநாயகர், விவாதத்திற்கான நேரம் இல்லை என்று சந்தர்ப்பம் வழங்கவில்லை.
ஆனாலும் ரவி கருணாநாயக்க எழுந்து நின்று காத்திருந்ததுடன் உரையாற்றுவதற்கான சந்தர்ப்பத்தைக் கோரினார். அச்சந்தர்ப்பத்தில் சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
அப்போது சபாநாயகர் தனது அமர்வை நிறைவு செய்து பிரதி சபாநாயகரிடம் கையளித்தார். அதுவரை ரவி கருணாநாயக்க நின்று கொண்டிருந்தார்.
இதன்போது பிரதி சபாநாயகரே ரவி கருணாநாயக்கவுக்கு சந்தர்ப்பம் வழங்கினார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் ஒருமுகத் திருவிழா



