தொடர்ந்தும் இராஜாங்க அமைச்சர் பதவியிலா லொஹான்? அரசாங்கத்திடம் ஐ.தே.கவின் கோரிக்கை
லொஹான் ரத்வத்த இன்னும் இரத்தினம் மற்றும் ஆபரணங்கள் தொடர்பான தொழில்களுக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சராக செயற்படுகின்றாரா என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி கோரியுள்ளது.
கட்சியின் துணைத் தலைவர் ருவன் விஜேவர்தன இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
லொஹான் ரத்வத்த போன்றவர்கள் எந்த அமைச்சுப் பதவியையும் வகிக்க தகுதியற்றவர்கள்.
எனவே அவர் இரத்தினம் தொடர்பான தொழில்களுக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் பதவியை வகிக்கிறாரா இல்லையா என்பதை அரசாங்கம் தெரிவிக்க வேண்டும்.
ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விடுவதாக அச்சுறுத்துவது பெரும் குற்றம்.
எனவே ரத்வத்த கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்று ருவான் விஜயவர்தன வலியுறுத்தியுள்ளார்.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
