ரதன தேரரின் மோசமான செயல்கள்: மாநாயக்க தேரர் உட்பட 50 வீதமான பிக்குகளுக்கு பெண்களுடன் தொடர்பு!
நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரின் மோசமான வேலைகள் காரணமாக பௌத்த பிக்கு எவருக்கும் அரசியலில் ஈடுபட முடியாதது மாத்திரமல்ல, வெளியில் இறங்கி செல்ல முடியாத நிலைமை உருவாகி இருப்பதாக எமது மக்கள் சக்தி கட்சியின் முன்னாள் செயலாளர் வெதினிகம விமலதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
சிங்கள வலை ஒளி தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.
ரத்ன தேரருக்கு எவரும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கவில்லை. அவர் திருட்டுத்தனமாக ஆவணங்களை தயாரித்து மோசடியான முறையில் அந்த பதவியை பெற்றுக்கொண்டார்.
அத்துரலியே ரதன தேரர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பயன்படுத்தி என்னை கடத்திச் சென்று, எழுதிய ஆவணம் ஒன்றில் பலவந்தமாக கையெழுத்து பெற்றுக்கொண்டார்.
நாங்கள் இணங்கி அவருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கவில்லை. ரதன தேரர் என்னிடம் வெற்று தாள்களில் கையெழுத்தை பெற்றுக்கொண்டு, நான் கட்சியின் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு கடிதம் ஒன்றை வழங்கினார்.
அந்த இடத்தில் தேசபந்து தென்னகோ, டிரான் அலஸ், ரதன தேரர், கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் இருந்தனர். தேசபந்து தென்னகோன் என்னை துப்பாக்கியை காட்டி மிரட்டினார்.
ரதன தேரர், ஞானசார தேரர இல்லாமல் ஆக்கி விட்டார். ஜாதிக ஹெல உறுமய கட்சியையும் அழித்தார். எமது மக்கள் சக்தி கட்சியையும் அழித்தார். அரசாங்கத்தில் உள்ள 11 கட்சிகளை உடைத்து, ரதன தேரர் எதிர்க்கட்சியின் அதிகாரத்தை கைப்பற்ற முயற்சித்து வருகிறார்.
பௌத்த பிக்குகளாக காவி போர்வையில் இருந்து கொண்டு பௌத்த சாசனத்தை அழிக்கும் பலர் இருக்கின்றனர். பௌத்த சாசன சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு 50 வீதத்திற்கும் மேற்பட்ட பிக்கு வேடதாரிகளில் காவிகளை கழற்ற வேண்டும்.
பெண்களுடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் சம்பந்தமாக காவியை துறக்க வேண்டுமாயின் முதலில் அஸ்கிரிய மாநாயக்க தேரரே தனது காவியை துறக்க வேண்டும். இலங்கையில் 50 வீதமான பௌத்த பிக்குகளுடன் பெண்களுடன் தொடர்புள்ள பிரச்சினை இருக்கின்றன.எனவும் வெதினிகம விமல திஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri
தமிழ்நாட்டில் அதிக முறை 100 கோடி வசூல் செய்த நடிகர் யார் தெரியுமா? விஜய்யா அல்லது ரஜினியா? Cineulagam