களமிறங்கும் எலிப்படையினர்! தோள் கொடுக்கும் மறு அவதாரம் (Video)
எலிகளின் புதிய அவதாரம்
சர்வதேச ரீதியாக எலிப்படைகளை உருவாக்கும் திட்டம் ஒன்றுக்கான ஆரம்பம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க எலிகளை கொண்ட படைகள் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை யாரும் நினைத்து பார்த்திருக்கவில்லை.
எனினும் அதனை நடைமுறைப்படுத்தும் வகையில் ஸ்கொட்லாந்தின் ஆராச்சியாளர் ஒருவர் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளார்.
ஸ்கொட்லாந்து ஆராச்சியாளர்
இதற்காக 7 எலிகளை, மீட்பு படையினராக உருமாற்றி அதற்கு பயிற்சிகளையும் ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் மருத்துவர் டோனா கீன்வழங்கி வருகிறார் .
நிலநடுக்கம், நிலச்சரிவு போன்ற இயற்கை இடிபாடுகளில் சிக்கித் தவிக்கும் மக்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பதற்காக இந்த எலிகளுக்கு தரமான பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த பயிற்சிகளின்போது எலிகளுக்கு முதுகுப்பை (backpack) அணிவிக்கப்பட்டு அதில் ஒலிவாங்கி (மைக்ரோஃபோன்) மற்றும் இடமறிதல் கருவி( லொகேஷன் ட்ரக்கர்) ஆகியன பொருத்தப்பட்டிருக்கின்றன.
இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்தால் பீப் ஒலியை எழுப்பும் வகையிலும் அந்த எலிகளுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டு வருவதாக ஆராய்ச்சியாளர் மருத்துவர் டோனா கீன் தெரிவித்துள்ளார்.




