கிளிநொச்சியில் அடையாளம் காணப்பட்ட எலிக்காய்ச்சல் நோயாளி
கிளிநொச்சிப் பகுதியில் எலிக்காய்ச்சல் நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி - கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குற்பட்ட புன்னைநீராவி கிராமத்தில் வசிக்கும் கண்டாவளை பிரதேச செயலகத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வரும் ஒருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நோய் பரவும் அபாயம்
காய்ச்சலுக்கு தர்மபுரம் பிரதேச வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறச் சென்றபோது இவரின் குருதி மாதிரி பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையிலேயே எலிக்காய்ச்சல் இருப்பது இனங்காணப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த நபர் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ள நிலைமையைத் தொடர்ந்து எலிக்காய்ச்சல் நோய் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதார பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
டிரம்பை நம்பி ஏமாந்த ஈரான் போராட்டக்காரர்கள்: அமெரிக்கா நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது ஏன்? News Lankasri
இரவில் உக்ரைன் மீது படையெடுத்த 200க்கும் மேற்பட்ட ரஷ்ய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்த போராடிய வீரர்கள் News Lankasri
பிக் பாஸ் டைட்டில் ஜெயித்த திவ்யாவுக்கு ரூ.50 லட்சம் மட்டுமின்றி மேலும் ஒரு பெரிய பரிசு! என்ன பாருங்க Cineulagam