சஹ்ரான் குழுவுக்கு வெடிபொருட்கள் வழங்கியதை ஒப்புக்கொண்ட ராசிக்!

Police 2019 Sri Lanka Easter bombings Investication
By Murali Apr 30, 2021 11:42 PM GMT
Report

உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் திட்டமிட்டமை தொடர்பாக ஏராளமான தகவல்களை அறிந்த ஒருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த சந்தேகநபர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு அங்குனுகொலபெலஸ்சவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணையில் ஏராளமான தகவல்களை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவர் காத்தான்குடியைச் சேர்ந்த ராசிக் ராசா என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். பயங்கரவாதி சஹ்ரான் ஹாஷிமின் சகோதரர் மொஹமட் ரில்வான், கடந்த 2018 இல் வெடிக்கும் சாதனமொன்றை பரிசோதிக்க முயன்றபோது காயமடைந்தார்.

இந்த சம்பவம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் நடைபெற்றுள்ளது. மேலும் வெடிபொருட்களை யார் சோதனைக்கு கொண்டு வந்தார்கள், சோதனை எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பாக தெளிவாகத் தெரியவில்லை.

இந்நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் கல்முனையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் முகமது ரில்வான் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக பயங்கரவாத புலனாய்வு பிரிவு நீண்ட விசாரணைகளை நடத்தியது.

இந்த விசாரணையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் திட்டமிட்டவர்கள் யார்?, வெடிக்கும் சோதனைக்கான மூலப்பொருள் வழங்கியவர்கள் யார்? உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக பயங்கரவாத புலனாய்வு பிரிவு தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில் காந்தான்குடியில் வசிக்கும் 28 வயதான ராசிக் ராசா, ரில்வானுடைய பரிசோதனைக்கு உதவியதாக நீண்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர் அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும், பயங்கரவாத பிரிவு, நீதிமன்றத்தில் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில், அவரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் பயங்கரவாதிகள் எவ்வாறு திட்டமிட்டார்கள் என்பது பற்றி அவருக்கு நிறைய விடயங்கள் தெரியும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

எனவே அவரை பயங்கரவாத தடுப்புப்பிரினர் தொடர்ந்து தடுத்துவைத்து விரிவான விசாரணைகளை முன்னனெடுக்கவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US