தமிழர்களுக்காக தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுடன் ஜனாதிபதி முரண்பட்டாரா! அம்பலமான பல உண்மைகள்(Video)
தொல்பொருள் அதிகாரிகளுடன் ஜனாதிபதி தமிழர்களுக்கு சார்பாக பேசிய காணொளிகள் செம்மைப்படுத்தப்பட்டவை என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில்,தொல்பொருள் திணைக்களம் தொடர்பான கலந்துரையாடலில் எங்களுக்கு சார்பாக ஜனாதிபதி எதுவும் செய்யவில்லை. அப்படி அவர் செயற்படுவாராக இருந்தால் அவர் விதுரவிக்ரமநாயக்கவை தான் பதவி விலக்கி இருக்க வேண்டும்.
அவர் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரு தரப்பிற்கும் சார்பாக செயற்படுவதாகவும் தொல்பொருள் திணைக்களத்துடன் முரண்படுவது போன்றும் நாடகம் நடத்துகின்றார்.
இதேவேளை அந்த காணொளி வெளியான இரு நாட்களுக்கு பின்னர் நாங்கள் தொல்பொருள் திணைக்களத்தை பாதுகாப்போம் என தேரர் ஒருவரிற்கு ஜனாதிபதி ஊடக பிரிவால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அன்று தொல்பொருள் திணைக்களத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி எந்த செய்தி வெளிவர வேண்டும் என நினைத்தாரோ அது தான் வெளியில் வந்தது என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |