இலங்கை மாணவியின் அரிய கண்டுபிடிப்பு
அவுஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் கல்விகற்றுவரும் இலங்கை மாணவி ஒருவர் உயர் தொழில்நுட்பத்திறன் கொண்ட குண்டு துளைக்காத கவச உடை ஒன்றைத் தயாரித்துள்ளார்.
சிட்னி பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பினை மேற்கொள்ளும் பிரபானி ரணவீர என்பவரே தனது படப்பிடிப்பை நிறைவு செய்ய மேற்கொள்ளவேண்டிய ஆராய்ச்சியின் பயனாக இதனைக் கண்டுபிடித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவைத் தளமாகக் கொண்ட சிங்கள ஊடகமொன்றுக்குக் கருத்து தெரிவித்த பிரபானி ரணவீர,
உலகில் குண்டு துளைக்காத உடைகள் இன்று வரையில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் அவற்றை அணிந்தவாறு தாக்குதல்களுக்கு முகங்கொடுக்கும்போது, உணரப்படும் அதிர்ச்சியை உடலால் தாங்க முடியாதமையினால் உயிர்ச்சேதங்கள் ஏற்படுகிறது.
அத்துடன், துப்பாக்கிச் சூட்டின்போது, ஏற்படும் கதிரியக்க செயற்பாடுகளால் உயிர்ச் சேதங்கள் ஏற்படாத போதிலும் அது பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
எவ்வாறாயினும், மேம்படுத்தப்பட்ட, உயர் தொழில்நுட்பத்திறன் கொண்ட குண்டு துளைக்காத உடை, போர்க்களத்தில் ஏற்படும் உயிரிழப்பிலிருந்து பாதுகாக்கிறது என்பதைத் தனது ஆராய்ச்சியில் மூலம் வெளிப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் புதிய வடிவமைப்பின் எடையை வெகுவாகக் குறைக்க உருக்கு தவிர, டைட்டானியம் மற்றும் அலுமினியம் ஆகிய மூன்று உலோகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
இந்தக் கண்டுபிடிப்பு, தாக்குதலின் பின்னரான மன உளைச்சலை 80 சதவீதம் வரை குறைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான கண்காட்சியில் கவனம் ஈர்த்த எதிர்கால ஆயுதம்: ஐரோப்பா-அமெரிக்கா இணைந்து உருவாக்கும் சக்திவாய்ந்த ட்ரோன் News Lankasri
12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. Cineulagam
கருப்பு திரைப்படத்தின் தமிழ்நாடு ஷேர் மற்றும் லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம் Cineulagam