பாடசாலை விடுமுறையில் உறவினர் வீட்டுக்கு சென்ற சிறுமி வன்புணர்வு-பௌத்த பிக்கு உட்பட நால்வர் கைது
14 வயதான பாடசாலை மாணவி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக மொனராகலை தொம்பகஹாவெல பிரதேசத்தை சேர்ந்த பௌத்த விகாரை ஒன்றின் பிக்கு உட்பட 4 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஜா-எலயை சேர்ந்த சிறுமி

ஜா-எல பிரதேசத்தை சேர்ந்த இந்த சிறுமி பாடசாலை விடுமுறையில் தொம்பகஹாவெல பிரதேசத்தில் உள்ள தனது அத்தையின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு தங்கியிருந்த காலத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பாட்டி மற்றும் அத்தையுடன் விகாரைக்கு சென்ற போது, இவர்கள் இருவரின உதவியுடன் சம்பந்தப்பட்ட பிக்கு விகாரைக்குள் வைத்தே சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.
அத்துடன் பிக்குவின் சகோதரர் ஒருவர் சிறுமியின் அத்தையின் வீட்டுக்கு சென்று சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக தொம்பகஹாவெல பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய பௌத்த பிக்கு, அவரது சகோதரர், குற்றத்திற்கு உதவிய சிறுமியின் அத்தை மற்றும் பாட்டியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்கள் மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து தொம்பகஹாவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக News Lankasri
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியாக நடிக்கும் நடிகை ஸ்ரீஜா தனது கணவருடன் எடுத்த அழகிய போட்டோஸ் Cineulagam