பதின்ம வயது சிறுமி வன்புணர்வு - வயோதிபருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
பதின்ம வயது சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வயோதிபரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருபாலையில் பதின்ம வயது சிறுமி ஒருவர் வயோதிபரினால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பமாக உள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது.
அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கோப்பாய் பொலிஸாருக்கும் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் விசாரணைகளை முன்னெடுத்த கோப்பாய் பொலிஸார் வயோதிபரை கைது செய்துள்ளதுடன், அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமியிடம் வாக்குமூலம் பெற்ற பொலிஸார் அவரை நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தியுள்ளனர்.
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
இதனை தொடர்ந்து சிறுமியை தாயாரின் பாதுகாப்பில் வைத்திருக்க அனுமதியளித்து நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

இந்த நிலையில் பதின்ம வயது சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டின் கீழ் முதியவர் இன்று யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நளினி சுபாகரன் முன்னிலையில் முற்படுத்தப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி பிணை விண்ணப்பத்தை முன்வைத்து
சமர்ப்பணம் செய்துள்ளார்.இதன்போது பிணை விண்ணப்பத்தை நிராகரித்த மன்று, சந்தேகநபரை நாளை மறுதினம் திங்கட்கிழமை
வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 13 மணி நேரம் முன்
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan