மீண்டும் வெலிக்கடை சிறைக்கு செல்லும் ரஞ்சன்: வெளியான காரணம்-செய்திகளின் தொகுப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பொதுமன்னிப்பின் கீழ் நிபந்தனையுடன் விடுதலையாகியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, மீண்டும் வெலிக்கடை சிறைச்சாலைக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தான் சிறையில் இருந்தபோது தன்னுடன் இருந்த கைதிகளை பார்வையிட்டு, சுகநலம் விசாரிப்பதற்காகவே ரஞ்சன் ராமநாயக்க இவ்வாறு சிறைச்சாலை செல்ல திட்டமிட்டுள்ளார்.
இதற்கான அனுமதியை அவர் கோரியுள்ளார்.
அதேவேளை, ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பூரண விடுதலையை வழங்குவது குறித்து அரச தரப்பில் தற்போது ஆராயப்பட்டுவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri
இலங்கைத் தமிழ் ரொம்ப பிடிக்கும் -சிட்னியில் ரசிகர்களை கவர்ந்த த்ரிஷா... விஜய் குறித்து ரசிகர் எழுப்பிய கேள்வி! Manithan