நிபந்தனையுடன் கூடிய பொது மன்னிப்புடன் ரஞ்சன் ராமநாயக்க சற்று முன் விடுதலை (Video)
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சற்று முன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நிபந்தனையுடன் கூடிய பொது மன்னிப்பு வழங்கப்பட்டு ரஞ்சன் ராமநாயக்க சற்றுமுன்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இரண்டாம் இணைப்பு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு நிபந்தனையுடன் கூடிய பொது மன்னிப்பை வழங்கும் ஆவணத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கையொப்பமிட்டுள்ளார்.
இந்த விடயத்தை ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் பொது மன்னிப்பு கடிதத்தில் ஜனாதிபதி செயலாளர் கையெழுத்திட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அனுமதியுடன் தான் கையெழுத்திட்டதாக ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

ரஞ்சன் விடுதலை செய்யப்படும் வாய்ப்பு
இந்த நிலையில், ரஞ்சன் ராமநாயக்க இன்றைய தினம் விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை ரஞ்சன் ராமநாயக்க சத்திய கடிதத்தின் ஊடாக நீதிமன்றத்திடம் மன்னிப்பு கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வீட்டிற்குள் ஊடுருவ முயற்சி: துணிந்து சண்டையிட்ட பள்ளி மாணவி: சோகத்தில் மூழ்கிய வேல்ஸ் News Lankasri
இதுவும் குணசேகரன் சதி தான்.. புது முடிவெடுத்த ஜனனி! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam