ரஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்றத்தில் பிரசன்னமாக அதிகாரிகளுக்கு உத்தரவிட சபாநாயகர் மறுப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை மன்றத்தில் பிரசன்னமாக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட சபாநாயகர் மறுப்பு வெளியிட்டுள்ளார்.
இந்த விடயத்தில் நீதிமன்றத்தின் உத்தரவை தாம் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ரஞ்சன் ராமநாயக்கவை நாடாளுமன்றத்தில் பிரசன்னப்படுத்துவதை உறுதிச்செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி விடுத்த கோரிக்கையின் போதே சபாநாயகர் இந்த மறுப்பை வெளியிட்டுள்ளார்.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 4 வருட கடூழியச்சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படக்கூடாது என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
எதிர்வரும் பெப்ரவரி 12 ஆம் திகதி வரை இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.




