ரஞ்சன் ராமநாயக்கவிற்காக நாடாளுமன்ற பதவியை துறக்கவுள்ள ஹரின்?
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தொடர்பாக மே மாத முதல் வாரத்தில் நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளதாக ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற பேரணியில் மேலும் பேசிய அவர்,
நான் ரஞ்சன் ராமநாயக்க சார்பாக ஒரு அரசியல் முடிவை எடுத்து வருகிறேன். மே முதல் வாரத்தில், நான் அரசாங்கத்திற்கு ஒரு சவாலை முன்வைப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
குறித்த அறிவிப்பு மூலம் தனது நாடாளுமன்ற ஆசனத்தை ஹரின் பெர்னாண்டோ தியாகம் செய்வார் என வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு மன்னிப்பு வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ அரசாங்கத்திடம் கோரிக்கை வைப்பார்
.
இதனை அடுத்து அவரை நாடாளுமன்றத்திற்கு அனுமதிக்கும் வகையில் தனது உறுப்புரிமையை ஹரின் பெர்னாண்டோ இராஜினாமா செய்வார் என அறிய முடிகின்றது.

தமிழ் தலைவர்களுக்கு மக்கள் புகட்ட வேண்டிய ஜனநாயகப் போராட்டம் 42 நிமிடங்கள் முன்

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

வீட்டைவிட்டு வெளியே போன மீனா, விஜயாவிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

செங்கடலில் ஹூவுதி படையினர் தாக்குதல்: கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்: கடத்தப்பட்ட ஊழியர்கள் News Lankasri
