மகிந்தவை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ரணில்
ரணிலும் நானும் பரஸ்பர மரியாதையை பேணக்கூடிய அரசியல் கலாசாரத்தை கொண்டவர்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தங்காலையில் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க நட்புறவாக சந்தித்த பின்னர் இதனை மகிந்த தெரிவித்துள்ளார்.
பரஸ்பர மரியாதை
நாங்கள் மிகவும் சுமுகமான உரையாடலை நடத்தினோம். நாங்கள் இருவரும் வெவ்வேறு அரசியல் கருத்துக்களை கொண்டிருந்தாலும், தேசிய பொறுப்புகளை நிறைவேற்றும் போது பரஸ்பர மரியாதையை பேணக்கூடிய ஒரு அரசியல் கலாசாரத்தின் சமகாலத்தவர்கள்.
எனது அன்பான ரணில் விக்ரமசிங்கவின் வருகைக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
மைத்ரி விக்ரமசிங்கவையும் மரியாதையுடன் நினைவு கூருகிறேன் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் கணக்கில் பதிவிடும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.






