வரிசை யுகத்தை மாற்றிய ஒரே தலைவர் ரணில் : விஜயகலா மகேஷ்வரன்
நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்ட போது தெற்கிலுள்ள பெரும்பான்மை உட்பட நாட்டு மக்களை வலிகளில் இருந்து காப்பாற்றிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே என முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கும் வகையில் நேற்று (28) வட்டுக்கோட்டை இளைய நட்சத்திரம் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், ”கடந்த காலங்களில் பிழையான தலைவர்கள் தெரிவு செய்யப்பட்டு இந்த நாடு வங்குரோத்து நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
2022ஆம் ஆண்டு அரகலய போராட்டத்தின் போது எந்தவொரு அரசியல்வாதியும் நாட்டின் தலைமைத்துவத்தை பயம் மற்றும் நிதி காரணமாக பொறுப்பெற்க தவறி விட்டார்கள்.
இந்நிலையில், தேசிய பட்டியலில் 5வீதத்திற்குள் உள்வாங்கப்பட்டு ஜனாதிபதியாகிய ரணில் விக்ரமசிங்க 2 வருடங்களில் நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்டெடுத்தார்” என கூறியுள்ளார்.
மேலும், அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |