ரணிலே எதிர்காலத்திலும் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படுவார்: ரி. உதயகலா (video)
நாட்டில் பொருளாதார ரீதியான முன்னேற்றங்கள் காணப்படுவதாகவும் அதனால் தற்போதுள்ள ஜனாதிபதியையே எதிர்காலத்தில் மக்கள் ஜனாதிபதியாக தேர்வு செய்யும் நிலைமை காணப்படுவதாக சர்வ மக்கள் கட்சியின் தலைவியும், பங்குச்சந்தை வர்த்தகருமான ரி. உதயகலா தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு - நாவற்குடா கட்சி அலுவலகத்தில் நேற்று (22.03.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் பெருமளவான விடயங்கள் மாற்றமடைந்து சாதகமான சூழ்நிலைகள் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
மக்களை ஏமாற்றி அரசியல் செய்யும் நிலைமையினை மாற்றி மக்களை சிறந்த முறையில் வாழ்வதற்கான நிலைமைகளை ஏற்படுத்த வேண்டும்.
மக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு நாங்கள் இந்தக் கட்சியை ஆரம்பித்திருக்கின்றோம்.
மாற்றம் ஒன்று தேவை. அந்த மாற்றத்தை எங்களுடைய சர்வகட்சியினூடாக மக்களுக்கு கொண்டு சேர்ப்பிக்க வேண்டிய கடமை என்மேல் விழுந்திருக்கின்றது.
இது தொடர்பிலான முழுமையான விபரங்களை உள்ளடக்கி வருகின்றது பின்வரும் காணொளி,

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
