ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டும்: தமிக்க பெரேரா-செய்திகளின் தொகுப்பு
பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிதியமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என முதலீடு மற்றும் ஊக்குவிப்பு அமைச்சர் தமிக்க பெரேரா கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கையின் நிதியமைச்சர் பேரழிவிற்குத் திட்டமிட்டுள்ளார் என சாடியுள்ள அவர், தற்போதைய டொலர் நெருக்கடியை தீர்க்க நிதி அமைச்சரிடம் எந்த திட்டமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
பொருளாதார சவால்கள் அனைத்தும் டொலரில் தங்கி இருப்பதாக சுட்டிக்காட்டிய தமிக்க பெரேரா நிதியமைச்சர் நண்பர்களிடம் இருந்து கடன் வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.
நாட்டிற்கு தேவையான பணத்தைக் கொண்டு வருவதற்கு நிதி அமைச்சரிடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை. டொலர் சம்பாதித்தல், கடன் வாங்குதல், அவசரக் கடன்கள், கடன்களை பெறுதல் போன்ற அனைத்து விடயங்களையும் நிதியமைச்சர் தாமதப்படுத்தி வருவதாகவும் அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மாலைநேர செய்திகளின் தொகுப்பு,