அரசியல்வாதிகள் அனைவருக்கும் புனர்வாழ்வு அளித்தவர் ரணில்: பாலித
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டதாக அண்மையில் வெளியான கருத்துக்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார பதிலளித்துள்ளார்.
மக்கள் முன் செல்வதற்குக் கூட சிரமப்பட்ட அரசியல்வாதிகள் அனைவருக்கும் புனர்வாழ்வு அளித்தவர் ரணில் விக்ரமசிங்கவே என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திரமாக நடமாடும் அரசியல்வாதிகள்
நாடு தீவிரமான சூழ்நிலையில் உள்ளது. இந்தநிலையில் பொதுமக்கள் முன் செல்வதற்கு சிரமப்பட்ட அரசியல்வாதிகள், தற்போது தமது வாகனங்களில் சுதந்திரமாக நடமாடுகின்றனர் அல்லது மேடைகளில் ஏறுகின்றனர்.
எனினும், ரணிலுக்கு புனர்வாழ்வளித்தோம் என்று இப்போது கூறுகின்றனர்.
ரணில்- ராஜபக்ச

இந்தநிலையில் அவர்கள் அனைவருக்கும் புனர்வாழ்வு அளித்தவர் ரணில் விக்ரமசிங்க என்பதை அவர்களால் இப்போது அதை நினைவில் கொள்ள முடியவில்லை என்று பாலித ரங்கே பண்டார குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ரணில் விக்ரமசிங்க ராஜபக்ச குலத்தின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படுகிறார் என்பதையும் அவர் மறுத்துள்ளார்.
ஜெயிலர் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா.. விஜய்யை தொடர்ந்து ரஜினி செய்யப்போகும் பிரம்மாண்ட விஷயம் Cineulagam
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri