ரணிலுக்கு அழைப்பு விடுத்ததாக வூல்ஹம்ப்டன் அறிவித்துள்ளது: வழக்கில் ஏற்பட்டுள்ள திருப்பம்
இங்கிலாந்தில் உள்ள வூல்ஹம்ப்டன் பல்கலைக்கழகம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அழைப்பு விடுத்துள்ளாக அறிவித்துள்ளது.
2023 பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தது என்றும் அந்த விழாவில் அவரது மனைவி மைத்திரி விக்ரமசிங்கவுக்கு கௌரவ பேராசிரியர் பதவி வழங்கப்பட்டது என்று அந்த பல்கலைக்கழகம் இதுகுறித்த தகவலை குற்றப்புலனாய்வு (CID) தெரிவித்ததாக ‘Sunday Times’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தால் வெளியிட்டுள்ள அறிக்கை
அந்த செய்தியின்படி கொழும்பு கோட்டை மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் (CID) நடத்திய விசாரணையிற்கான பதிலாக பல்கலைக்கழகம் இதை உறுதிப்படுத்தியுள்ளது.
ஆனால் பல்கலைக்கழகம் உத்தியோகப்பூர்மாக அழைப்பு விடுக்கவில்லை என்ற சந்தேகமும் வலுவடைந்துள்ளது.
இந்த செய்தயில் எங்கேயும் உத்தியோகப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படவில்லை.
இந்த அழைப்பு தொடர்பில் ஓசல ஹேரத் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பிரகாரம் பிரித்தானியாவில் கேட்டுக் கொண்டதற்கிணங்க பல்கலைக்கழத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆவணங்களில் உத்தியோகப்பூர்வ அழைப்பு விடுக்கப்படவில்லை என அவர் அறிவித்திருந்தார்.

இது தொடர்பில் ரணில் விக்ரமசிங்கவும் அவரிடம் கேட்டுள்ளார். பல்கலைக்கழகம் அரசு நிதியுதவி பெறும் அரசு சார்ந்த நிறுவனம் என்பதையும் அதன் உபவேந்தர் (CID) பிரதானிக்கு அறிவித்துள்ளார்.
சட்ட முறைப்படிக் கோரிக்கை மூலம் தகவல் பெறுவதற்கு நீதித்துறை துறை முன்னர் திட்டமிட்டிருந்தபோதும் (CID) பல்கலைக்கழகத்துக்கு வினாக்களுடன் கூடிய மின்னஞ்சல் ஒன்;றை அனுப்பி பதில் பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பல்கலைக்கழகம் அனுப்பியுள்ள மின்னஞ்சல்
பல்கலைக்கழகத்தின் மின்னஞ்சல் பதில் சட்ட மாஅதிபர் அல்லது வழக்கை நடத்தும் மேலதிக சொலிசிட்டர் திலீப பீரிசுக்கு அறிவிக்கப்பட்டதா என்பது இதுவரை தெளிவாக இல்லை.
2023 ஆம் ஆண்டில் ஜனாதிபதியாக இருந்தபோது இங்கிலாந்துக்கு மேற்கொண்ட “தனிப்பட்ட பயணத்தின்” போது ரூ.16.6 மில்லியனுக்கும் மேற்பட்ட அரசுப் பணம் தவறாக பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து (CID) தற்போது விசாரணை நடத்தி வருகிறது. அவர் வூல்ஹம்ப்டன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக அரசு செலவில் பயணம் செய்தார் என்ற குற்றச்சாட்டு முக்கியமானதாகும்.

இதனிடையில் இருதய அறுவை சிகிச்சைக்குப் பின் ரணில் விக்ரமசிங்க தற்போது சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அறுவைசிகிச்சை சில மணி நேரங்களுக்கு நீடித்ததாகவும் தற்போது அவர் முழுமையான ஓய்வில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அவரை பார்க்க குடும்பத்தினர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவருக்கு எதிரான (CID) வழக்கு ஏப்ரல் 27ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.