ரணிலின் கைதினை தொடர்ந்து நீதிமன்றிற்கு விரைந்த மைத்திரி - சாமர
புதிய இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு விசாரணையின் முடிவு இன்னும் சிறிது நேரத்தில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
அவரை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்தும் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
நீதிமன்ற வளாகத்தில் மின்சார தடை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையில், முன்னாள் அரசியல்வாதிகள் பலரும் நீதிமன்ற வளாகத்திற்கு விரைந்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதியின் ஆதரவாளர்கள் ஏராளமானோர் நீதிமன்ற வளாகத்தில் கூடியுள்ளனர்.
முக்கிய புள்ளிகள்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன, டிரான் அலஸ், அனுர பிரியதர்சன யாப்பா, வஜிர அபேவர்த்தன, நிமல் லான்சா நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, முஜீபுர் ரஹ்மான், ரவி கருணாநாயக்க, ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிதலைவர் ருவான் விஜேவர்த்தன ஆகியோர் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளனர்.
ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டதை அடுத்து, நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று(22) நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னிலையாகியிருந்தார்.
நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த வாக்குமூலத்திற்குப் பிறகு விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.
[




