ஜனாதிபதியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழர் பகுதிகளில் விசேட வழிபாடு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிறந்தநாளை முன்னிட்டு வவுனியாவில் விசேட வழிபாடும் இலவச காப்புறுதித் திட்டம் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது ஐக்கிய தேசியக் கட்சியின் வன்னித் தேர்தல் தொகுதி அமைப்பாளர் தலைமையில் வவுனியா கந்தசுவாமி ஆலயத்தில் நேற்று (24.03.2024) இடம்பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் வவுனியா அலுவலகத்தில் கட்சியின் உறுப்பினர்களுக்கு இலவச காப்புறுதி வழங்கும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்நிகழ்வில் கட்சியின் வன்னித் தேர்தல் தொகுதி அமைப்பாளர் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
செய்தி - வசந்தரூபன்
மட்டக்களப்பு
ஜனாதிபதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் ஆசீர்வாதம் வேண்டி விசேட வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் நல்லாசி வேண்டி மட்டக்களப்பு புளியந்திவு சித்திர வேலாயுத சுவாமி தேவாலயத்தில் ஆலய பிரதம குருசிவ ஸ்ரீ பகீரத சர்மா தலைமையில் இந்த விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.
இந்த விசேட வழிபாட்டு நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த வலய அமைப்பாளர்கள், முக்கியஸ்த்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
செய்தி - ருசாத்