சாட்சியம் இருந்தால் வழக்கு தொடருங்கள் இல்லை விடுதலை செய்யுங்கள் - ரிசாட் குறித்து சபையில் ரணில்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீனுக்கு (Rishad Bathiudeen) எதிராக சாட்சி இருந்தால் வழக்கு தொடருமாறும், சாட்சியம் இல்லை என்றால் விடுதலை செய்யுமாறும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில், இது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தப்பட்ட பிரச்சினையல்ல.
நாடாளுமன்ற சிறப்புரிமை தொடர்பான பிரச்சினை என்பதால் இது குறித்து சரியாக செயற்படவில்லையெனில் அடுத்த முறை சிறப்புரிமைகள் இல்லாமல் போகும் ஆபத்து அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இருக்கின்றது.
ஈஸ்டர் ஞாயிறு சம்பவம் சம்பந்தமாக பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் பொலிஸ் அத்தியட்சகர்கள் அனைத்தையும் நன்றாகவே செய்தனர்.
அவர்கள் தமது பொறுப்பை தவறவிட்டனர் என்று கூற முடியாது எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
