இலங்கை எதிர்கொள்ளப்போகும் மிகப்பெரிய சவால்..! ரணிலின் கடுமையான எச்சரிக்கை
மூன்றாவது தரப்பினர் மீது தாக்குதல்களை நடத்த பயங்கரவாதக் குழுக்கள் இலங்கை தீவை பயன்படுத்தக்கூடும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் எதிர்காலத்தில் இலங்கை எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் இது போன்ற பயங்கரவாதத் தாக்குதல்களை தவிர்க்கும் நோக்கில் செயல்படுவதும் ஒன்றாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நாம் 30 வருடங்களாக யுத்தத்தை நடத்தி அதனை வெற்றியுடன் முடித்துக் கொண்டோம், தேசிய பிரச்சினைக்கான தீர்வுக்காக தமிழ் கட்சிகளுடன் கலந்துரையாடி வருகிறேன், தேசியப் பிரச்சினைக்கு இன்னும் சில மாதங்களில் இறுதித் தீர்வு கிடைக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,