படலந்த விவகார எதிரொலி! ரணிலிடம் இருந்து முக்கிய அறிக்கை
படலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளார்.
முன்னதாக சர்வதேச ஊடகமொன்றில் ரணில் விக்ரமசிங்கவிடம் எழுப்பப்பட்ட படலந்த விவகாரம் தொடர்பிலான கேள்விகள் இலங்கை உள்ளிட்ட சர்வதேச அரசியல் அரங்கங்களில் பேசுபொருளாகியுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பான அறிக்கை இன்று (14) சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்கவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதற்கு பதில் வழங்கும் விதமாக ரணில் விக்ரமசிங்க சிறப்பு பதில் அறிக்கையை எதிர்வரும், ஞாயிற்றுக்கிழமை (16.03.2025)வெளியிடவுள்ளார்.
தொடர்புடைய அறிக்கை
அப்போது, தொடர்புடைய அறிக்கை தொடர்பாக இரண்டு நாள் விவாதம் நடத்தப்படும் என்று . பிமல் ரத்நாயக்க கூறியுள்ளார்.
படலந்த அறிக்கையை கையாள்வது குறித்து ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை கொள்கை முடிவை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
அதன்படி, இந்த அறிக்கையை சட்டமா அதிபருக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பான எதிர்கால நடவடிக்கைகளுக்கான வழிமுறைகளை முன்மொழிய ஒரு சிறப்பு குழுவை நியமிக்க ஜனாதிபதி முடிவு செய்துள்ளார்
மேலும், இந்தப் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் இரண்டு நாள் விவாதம் நடத்த உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
