எலோன் மஸ்க்கிற்கு நன்றி கூறிய ரணில்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, உலகின் முதனிலை செல்வந்தர்களில் ஒருவரான எலோன் மஸ்கிற்கு நன்றி பாராட்டியுள்ளார்.
ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை அனைத்து இலங்கையர்களுக்கும் வழங்கியதற்காக அவர், மஸ்க்கிற்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் மாற்றம்
தனது அதிகாரப்பூர்வ X (முன்னாள் ட்விட்டர்) கணக்கில் பதிவொன்றை இட்டதன் மூலம் அவர் இவ்வாறு நன்றி தெரிவித்துள்ளார்.
“நமது நாட்டின் டிஜிட்டல் மாற்றத்தில் இது முக்கியமான முன்னேற்றமாகும்” என ரணில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இலங்கையின் டிஜிட்டல் எதிர்கால வளர்ச்சிக்காக எலோன் மஸ்க்குடன் விரைவில் சந்திக்க ஆவலாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 2024ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலோன் மஸ்க்குடன் நடைபெற்ற சந்திப்பின்போது, ஸ்டார்லிங்க் இணைய சேவையை இலங்கையில் தொடங்கும் திட்டம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |