தேயிலை கைத்தொழிலை ஊக்குவிக்க முயற்சி: ஜனாதிபதி தெரிவிப்பு

Sri Lanka Upcountry People Ranil Wickremesinghe Economy of Sri Lanka
By Rakesh 9 months ago
Report

ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கி நாட்டை நகர்த்த, இலங்கை தேயிலை கைத்தொழிலை அனைத்து பரிமாணங்களிலும் ஊக்குவிப்பதற்கு முறையான திட்டங்களை அரச மற்றும் தனியார் துறைகளுடன் இணைந்து செயற்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். 

கொழும்பில் நேற்று (25) ஆரம்பமான 'கொழும்பு சர்வதேச தேயிலை மாநாட்டின்' ஆரம்ப நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

கொழும்பு தேயிலை வர்த்தகர்கள் சங்கமும் இலங்கை தேயிலை சபையும் இணைந்து 'தேயிலை – ஒரு வாழ்க்கை முறை மற்றும் வாழ்வாதாரம்' என்ற தொனிப்பொருளில் இரண்டு - நாள் மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில்,

"கடந்த நான்கு வருடங்களில் நாங்கள் செய்த பணிகளை நான் நினைவு கூற வேண்டியதில்லை. ஆனால், இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்காக மேலும் அதிகமாக அந்நியச் செலாவணி தேவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

கட்டுப்பணம் செலுத்தினார் ரணில்!

கட்டுப்பணம் செலுத்தினார் ரணில்!

ஏற்றுமதி பொருளாதாரம் 

எனவேதான், அடுத்த தசாப்தத்தில் நாட்டை ஏற்றுமதி பொருளாதாரமாக மாற்ற நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடையும் இலக்கை எட்டிய மற்றும் டிஜிட்டல் மயமாக்கலை அடிப்படையாகக் கொண்ட அதிக போட்டி நிறைந்த பொருளாதாரமாகவும் இருக்க வேண்டும்.

தேயிலை கைத்தொழிலை ஊக்குவிக்க முயற்சி: ஜனாதிபதி தெரிவிப்பு | Ranil Talked About Improving Tea Making Bussiness

இன்று விவாதிக்கப்படும் இந்த சட்டமூலத்தில் அதனுடன் தொடர்புடைய கோட்பாடுகள் மற்றும் நிறுவனக் கட்டமைப்பு ஆகியவை உள்ளடக்கப்பட்டுள்ளன. இதற்கு நாடாளுமன்றத்தில் அனைத்து கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன்.

நாட்டை ஏற்றுமதி பொருளாதாரமாக மாற்றுவதில் தேயிலை கைத்தொழிலுக்கும் பெரும் பங்கு உள்ளது. தேயிலை உட்பட எமது பெருந்தோட்டக் கைத்தொழில், 19 மற்றும் 20ஆம் நூற்றாண்டுகளின் நிலப்பிரபுத்துவ பொருளாதாரத்திலிருந்து நவீன பொருளாதாரமாக எம்மை மாற்றியது.

தேயிலை கைத்தொழில் இல்லையென்றால் இன்று இந்நாட்டில் நவீனமயப்படுத்தல்கள் ஏற்பட்டிருக்காது. தேயிலை தொழில் இல்லாவிட்டால் ‘எல்ல’ பிரதேசம் சுற்றுலாத்தலமாக மாறியிருக்காது. நாங்கள் இப்போது மற்றொரு விசேட கட்டத்தில் இருக்கிறோம். இங்கே நாம் யதார்த்தமாக இருக்க வேண்டும்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆணைக்குழு வெளியிட்டுள்ள விசேட அறிக்கை

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆணைக்குழு வெளியிட்டுள்ள விசேட அறிக்கை

பெருந்தோட்ட மக்கள் 

30 – 40 வருடங்களாக நிலம் மற்றும் தோட்டம் மூலம் பெறக்கூடிய வருமானத்தை இழந்த நாடாக மாறிவிட்டோம். அந்த வருமானத்தை மீளப்பெற தோட்டத்தையும் நாட்டையும் அபிவிருத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம். 

தேயிலை கைத்தொழிலை ஊக்குவிக்க முயற்சி: ஜனாதிபதி தெரிவிப்பு | Ranil Talked About Improving Tea Making Bussiness

அதிக வருமானத்தை பெறுவதில் கவனம் செலுத்தியுள்ள சிறிய தோட்ட உரிமையாளர்கள் மற்றும் பெரிய நிறுவனங்கள் ஆகிய இரண்டு துறைகளிலும் முன்னேறும் விவசாய வர்த்தகம் எமக்கு அவசியம்.

இரண்டு தனித்துவமான கட்டங்கள் இருப்பதோடு அவற்றில் முதலாவது, சம்பளப் பிரச்சினையைத் தீர்ப்பதாகும். கடந்த பொருளாதார நெருக்கடியின் போது மிகவும் பாதிக்கப்பட்ட மக்களில் பெருந்தோட்ட மக்களும் உள்ளனர் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

அத்துடன், பெருந்தோட்டம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் தற்போதுள்ள அனைத்து லயன் அறைகளையும் அரசாங்கம் கையகப்படுத்தி கிராமங்களாக மாற்றுவதற்கு மீண்டும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட எதிர்பார்த்துள்ளோம்.

அப்போது பெருந்தோட்ட வளர்ச்சியுடன் லயன் அறைகள் என்ற கருத்து ஒழிக்கப்படும் என எதிர்பார்க்கின்றோம். வடக்கு மாகாணத்தில் போரினால் பாதிக்கப்பட்ட சில பகுதிகளை விட நுவரெலியா பகுதியில் பல பரிமாண வறுமை குறிகாட்டிகள் மிக அதிகமாக உள்ளன. எனவே, இந்த பிரச்சினையில் நாம் முதன்மையான கவனம் செலுத்த வேண்டும்.

மகிந்தவுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்ட மொட்டு எம்.பிக்கள்

மகிந்தவுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்ட மொட்டு எம்.பிக்கள்

 ஸ்மார்ட் விவசாயம் 

மேலும், இந்த நேரத்தில் சில நிறுவனங்கள், குறிப்பாக சிறிய அளவிலான நிறுவனங்கள் எதிர்கொள்ளும் கடன் பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என்பதில் சிக்கல் உள்ளது.

தேயிலை கைத்தொழிலை ஊக்குவிக்க முயற்சி: ஜனாதிபதி தெரிவிப்பு | Ranil Talked About Improving Tea Making Bussiness

மேலும், ரஷ்ய சந்தைக்கான பிரவேசம் குறித்தும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் அவர்களை எந்த வகையிலும் பின்னோக்கித் தள்ளவில்லை. அவர்கள் எப்படியோ ஆசியாவிற்கு வந்துள்ளார்கள். ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யப் எதிர்பார்த்துள்ள நாடுகளுக்கு புதிய நோக்கு தேவை என்பதுதான் பிரச்சினை.

ஆனால், அதற்கு அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வரும் வரை காத்திருக்க வேண்டும். அதுவரை, ரஷ்யாவிற்கு உங்கள் தேயிலையை அனுப்புவதற்கு உங்களுக்கு உரிய வழிகளைப் பயன்படுத்த வேண்டும்.

எமது நாட்டில் சிறு தோட்ட உரிமையாளர்கள் அதிகளவில் உள்ளனர், அவர்கள் மூலம் தோட்டத் தொழில்துறையை எவ்வாறு விவசாய வர்த்தகமாக மாற்றுவது என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

நாங்கள் தேயிலையை மட்டும் பயிரிடுகிறோமா அல்லது உங்கள் பகுதிகளில் ஸ்மார்ட் விவசாயத்திற்கு இடமளிக்கிறோமா என்று தீர்மானிக்க வேண்டும். எதிர்வரும் காலங்களில் விவசாய வர்த்தகத்தின் வளர்ச்சிக்காக நாட்டின் ஏனைய பகுதிகளிலும் காணிகளை வழங்க எதிர்பார்க்கின்றோம்.

அதைப் பற்றி கண்டறிய உங்களுக்கு வாய்ப்பு உள்ளது. எமது சில நிறுவனங்கள் வெளிநாடுகளுக்குச் சென்று தொழில் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன. தேயிலை தொழிலில் இலங்கை முன்னணியில் இருக்கும் வரை அரசாங்கத்திற்கு பிரச்சினை இல்லை. அதனை நாம் முன்னேற்ற வேண்டும். தேயிலை சந்தையில் இலங்கை ஆதிக்கம் செலுத்த வேண்டும்” என சுட்டிக்காட்டியுள்ளார். 

வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம்

வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

நுவரெலியா, மட்டக்களப்பு, கொழும்பு, Michigan, United States

11 Apr, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Thampalai, பிரான்ஸ், France, London, United Kingdom

13 Apr, 2020
மரண அறிவித்தல்

விடத்தற்பளை, பாலையூற்று

09 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

14 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், பாண்டியன்தாழ்வு, Fontainebleau, France

13 Mar, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை வடக்கு, சரவணை கிழக்கு, கந்தர்மடம்

09 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வண்ணார்பண்ணை, உடுவில், Scarborough, Canada

12 Mar, 2025
19ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, England, United Kingdom, கொழும்பு

11 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொக்குவில், Dortmund, Germany

24 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

23 Mar, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தனங்கிளப்பு, Lewisham, United Kingdom

06 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, பிரித்தானியா, United Kingdom, Toronto, Canada

11 Apr, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, Montreal, Canada

12 Apr, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பளை

11 Apr, 2023
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தொல்புரம், அராலி, Toronto, Canada

09 Apr, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Mississauga, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, London, United Kingdom

06 Apr, 2020
மரண அறிவித்தல்

சில்லாலை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

குடத்தனை, வராத்துப்பளை, Montreal, Canada, Cornwall, Canada

07 Apr, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், சுழிபுரம், London, United Kingdom

27 Mar, 2025
கண்ணீர் அஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொழும்பு

05 Apr, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US