ரணிலை ஆதரிக்கும் விபரங்கள் விரைவில் வெளிவரும் - பாலித ரங்கே பண்டார
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களை விபரங்கள் விரைவில் வெளிவரும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
எனினும் தங்கள் கட்சியைச் சேர்ந்த எவரும் விக்ரமசிங்கவை ஆதரிக்க மாட்டார்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவை நாடாளுமன்றத்தில் 60 உறுப்பினர்கள் எவ்வாறு ஆதரிக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதில் வழங்கியுள்ள ரங்கே பண்டார, 60 உறுப்பினர்களில் ஆளும் கட்சியை சேர்ந்தவர்களும் இருக்கலாம் என்று கூறியுள்ளார்.
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும ஐக்கிய மக்கள் சக்தியின் துணை தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் பாட்டலி சம்பிக
ரணவக்கவுக்கு சிரேஷ்ட பதவி ஒன்றை வழங்குவதற்கான பேச்சுக்கள் நடைபெற்று
வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.





உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
