தேர்தல் பற்றியும் கட்சி பற்றியும் கவலைப்படாத ஒருவர் ரணில்: அமைச்சர் ஹரின் தெரிவிப்பு
தேர்தல் பற்றியும் கட்சி பற்றியும் கவலைப்படாத ஒருவர் ரணில் விக்கிரமசிங்கதான் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இப்போதுள்ள அரசியல் தலைவர்கள் மக்களின் பிரச்சினையைச் சரியாகப் புரிந்து வைத்துள்ளார்களா? என்று எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்கும் போதுதே இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், மீண்டும் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் மலராது.
மக்களின் பிரச்சினைகள்
நாட்டின் தற்போதையை நிலைமையின் கீழ் எந்தக் கட்சி தேர்தலில் வென்றாலும் அவர்களால் 113 ஐ பெற முடியாது. மக்களின் பிரச்சினைகள் அப்படியே இருக்க இவர்கள் எல்லோரும் தேர்தலை நோக்கியே பயணிக்கின்றனர்.
எரிபொருள் உள்ளிட்ட பிரச்சினை ஓரளவு சரி வந்ததும் அதை வைத்துக்கொண்டு உடனே தேர்தலுக்குப் போவதற்கு முயற்சி செய்கின்றனர். எல்லோரும் தேர்தல் தேர்தல் என்றே நிற்கின்றனர்.
மேலும், தேர்தல் பற்றியும் கட்சி பற்றியும் கவலைப்படாத ஒருவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கதான் என தெரிவித்துள்ளார்.