ரணில் வடக்கு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்: அநுர பகிரங்கம்
யாழில் (Jaffna) நடைபெற்ற பேரணியின் போது இனவாதத்தை தூண்டியதற்காக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) வடக்கு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று, தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
நிறுவனங்களுக்கு இடையிலான நிறுவன ஊழியர் சங்கத்தின் 25ஆவது மாநாட்டில் உரையாற்றிய அநுரகுமார, தமக்கு எதிராக வடக்கு மக்களிடம் தேவையற்ற கருத்தை, ரணில் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
எனவே, வடக்கு மக்களிடம் மன்னிப்புக் கோருமாறு, அவர் ஜனாதிபதி விக்ரமசிங்கவிடம் கோரியுள்ளார்.
இனவாதத்தை தூண்ட முயற்சி
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
"ரணில், இந்த தேர்தலில் இனவாதத்தை தூண்ட முயற்சிக்கிறார். எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு (M. A. Sumanthran) நன்றி சொல்ல வேண்டும்.
ரணிலுக்கு அவர் சரியான பதிலை அளித்தார். ஆகவே, ரணில் இப்போது வடக்கு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
இதேவேளை, நாட்டில் இனவாதத்தை தூண்டும் அரசியல் தற்போது இல்லை. அவ்வகையான அரசியல் இப்போது செல்லுபடியாகாது, அது, வெற்றியடைவதும் இல்லை” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 15 மணி நேரம் முன்

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam
