மன்னராட்சிக் காலத்தை விட தனது ஆட்சியில் அதிக அபிவிருத்தி! ரணில் விக்கிரமசிங்க பெருமிதம்
முன்னைய மன்னராட்சிக் காலங்களில் நடைபெற்ற அபிவிருத்திப் பணிகளை விட தானும் தனது குழுவினரும் இலங்கையின் அபிவிருத்திக்காக பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு விசேட நேர்காணல் ஒன்றை வழங்கும்போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மன்னராட்சிக் காலம்
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், மன்னர்களின் ஆயிரம் ஆண்டு கால ஆட்சியில் சாதிக்கப்பட்டதை விட, தானும் தனது குழுவினரும் நாட்டிற்காக அதிக அபிவிருத்திப் பணிகளையும் செயல்களையும் சாதித்துள்ளோம் என்று வலியுறுத்தினார்.

'முன்னைய மன்னராட்சிக் காலத்தில் மன்னர்களால் கட்டப்பட்ட அனைத்துக் குளங்களையும் ஒன்றாகச் சேர்த்தாலும், நாங்கள் அதைவிட அதிகமான குளங்களைக் கட்டியுள்ளோம்.
சிங்கள மன்னர்கள் ஆயிரம் ஆண்டுகளில் செய்ததை விட நாங்கள் இங்கு அதிகமாகச் செய்துள்ளோம்.' என்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.