சஜித்தையோ அநுரவையோ நம்பாதீர்கள்! கிளிநொச்சியில் ரணில் கருத்து

Kilinochchi Anura Kumara Dissanayaka Ranil Wickremesinghe Sajith Premadasa
By Rakesh Sep 11, 2024 12:36 AM GMT
Report

சஜித்தின் அல்லது அநுரவின் எதிர்காலத்தை அல்ல, தமது மற்றும் தமது பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து இந்த நாட்டு மக்கள் தனக்கு வாக்களிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று (10.09.2024) செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடைபெற்ற 'இயலும் ஸ்ரீலங்கா' பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,

“அண்மைய பொருளாதார வீழ்ச்சியை அடுத்து மக்கள் படும் துன்பத்தைப் போக்க சஜித்தோ அல்லது அநுரவோ முன்வரவில்லை. நான் உலகெங்கிலும் உள்ள அரச தலைவர்களைச் சந்தித்து உரம், எரிபொருள் கேட்ட போது சஜித்தும் அநுரவும் தேர்தல் நடத்துமாறு கோரினர்.

ஜனாதிபதி வேட்பாளருக்கான ஆதரவு குறித்து தமிழரசுக் கட்சி விரைவில் விசேட அறிவித்தல்!

ஜனாதிபதி வேட்பாளருக்கான ஆதரவு குறித்து தமிழரசுக் கட்சி விரைவில் விசேட அறிவித்தல்!

பொருட்களின் விலை

மக்களின் வலிக்கு மத்தியில் தேர்தல் நடத்துமாறு கோரியும், வேலைநிறுத்தம் நடத்தியும் நாட்டைச் சீர்குலைக்க முயன்ற தலைவர்களை நம்ப முடியாது.

எனவே, சிரமப்பட்டு கட்டியெழுப்பப்பட்ட நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி நகர்த்தி அபிவிருத்தியடைந்த நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பை நிறைவேற்ற அனைவரும் கைகோர்க்க வேண்டும்.

கஷ்டங்களில் இருந்து மீண்டு மக்கள் சுமுகமாக வாழ வழி செய்ய வேண்டுமெனக் கருதியே ஆட்சியை ஏற்றுக்கொண்டேன். அநுரவோ, சஜித்தோ அரசை ஏற்க முன்வரவில்லை.

சஜித்தையோ அநுரவையோ நம்பாதீர்கள்! கிளிநொச்சியில் ரணில் கருத்து | Ranil Says Do Not Believe Anura Or Sajith

மக்களின் வயிற்றுப்பசியைப் போக்கவோ, தட்டுப்பாடுகளை நிவர்த்திக்கவோ, பிள்ளைகளின் கல்வியை உறுதிப்படுத்தவோ அவர்கள் முன்வரவில்லை. மக்கள் கஷ்டப்படுவதை அவர்கள் வேடிக்கை பார்த்தனர்.

கஷ்டத்தை போக்க உதவி செய்ய வருமாறு அவர்களிடம் கோரினேன். அதையும் அவர்கள் மறுத்துவிட்டனர். மக்கள் தட்டுப்பாடுகளுடன் தவித்தபோது அவர்களுக்குத் தேர்தல் தேவைப்பட்டது.

தேர்தல் நடத்தியிருந்தால் மக்கள் பிரச்சினைகள் தீர்ந்திருக்குமா? அவர்கள் தேர்தலுக்குப் பணத்தைச் செலவிடச் சொன்னார்கள். அவர்களை என்னோடு இணையுமாறு அழைத்தேன் வரவில்லை. மக்கள் கஷ்டத்தில் அரசியல் இலாபம் தேடினார்கள். நான் தட்டுப்பாடுகளை நிவர்த்திக்க வழி செய்தேன்.

அதனால் தொழில்களை மீள ஆரம்பிக்க முடிந்தது. எந்தப் பிரச்சினைகள் இருந்தாலும் மக்களை வாழவைக்கும் முயற்சிகளை எடுத்தோம். அன்று பொருட்களின் விலை அதிகரித்திருந்தது.

நவீன விவசாய முறைமை

நான் ரூபாவை பலப்படுத்தி விலைகளை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கினேன். நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வருகின்றது. ஆனால், பிரச்சினைகள் இன்னும் உள்ளன. மக்களுக்கு சுமைகள் உள்ளன.

அவற்றைக் குறைக்க வழி செய்வோம். இன்று சுமுகமான சூழலை உருவாக்கியிருக்கின்றோம். ஐ.எம்.எப். மற்றும் 18 நாடுகளின் கடன் உதவிகள் கிடைக்கவுள்ளன. அதனை முன்னோக்கிக் கொண்டுச் செல்ல வேண்டும்.

அடுத்த ஐந்து வருடங்களில் அதற்கு வழி செய்வேன். அதற்காகவே மக்கள் ஆணை கேட்கின்றேன். பொருளாதாரத்தை நிலைப்படுத்தியிருந்தாலும். அது முழுமையாக உறுதியாகவில்லை. அதற்காகவே இயலும் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தை கொண்டு வந்திருக்கின்றேன்.

சஜித்தையோ அநுரவையோ நம்பாதீர்கள்! கிளிநொச்சியில் ரணில் கருத்து | Ranil Says Do Not Believe Anura Or Sajith

ஐந்து அம்சங்களை உள்ளடக்கி அந்தத் திட்டத்தை தயாரித்திருக்கின்றோம். ரூபாவை வலுவடையச் செய்வதே மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான சிறந்த வழியாகும். மக்கள் தாங்கிக்கொள்ள கூடிய அளவு பொருட்களின் விலையை குறைக்கலாம். பணம் அச்சிட்டால் அது நடக்காது.

அதிகளவில் கடன் பெற்றாலும் அதே நிலையே ஏற்படும். நாம் கடன் பெறுவதை நிறுத்தியுள்ளோம். அதனால்தான் வருமானத்தை மேம்படுத்த வற் வரியை அதிகரித்து ரூபாவைப் பலப்படுத்தினோம். இப்போது வௌிநாட்டு வருமானத்தை ஈட்ட வேண்டியுள்ளது.

இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு பணம் இல்லாமையால் கடன் பெற வேண்டியுள்ளது. எனவே, ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயம் காணப்படுகின்றது. நவீன விவசாய முறைமைகளுக்குச் செல்ல மக்களுக்கு உதவிகளை வழங்குவோம்.

பிள்ளைகளின் எதிர்காலம்

மரக்கறி மற்றும் பழங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்து விநியோகிக்க தனியாருடன் இணைந்து சந்தைப்படுத்தல் திட்டங்களை அறிமுகப்படுத்துவோம். நெல் விளைச்சலையும் பலப்படுத்துவோம். உலக சனத்தொகை அதிகரித்து வரும் வேளையில் உணவு உற்பத்தியை அதிகப்படுத்தி நாமும் வலுடைய வேண்டும்.

இதனால் கிராமங்களில் வறுமை மறையும். இந்த பகுதிகளை இலங்கையின் மிகச்சிறந்த விவசாய மையமாக மாற்றுவோம். எமக்கு உதவ மக்கள் முன்வர வேண்டும். அதற்காகவே பலாலி சர்வதேச விமான நிலையை மேம்படுத்தினோம்.

பரந்தன், காங்கேசன்துறை, மாங்குளத்தில் முதலீட்டு வலயங்களை அமைப்போம். சூரிய சக்தி மூலம் மின்சார உற்பத்தி செய்வோம். இந்தியாவுக்கு அதனை விற்பனை செய்யவும் முடியும். அதனால் பலருடைய வாழ்க்கை செழிப்படையும்.

சஜித்தையோ அநுரவையோ நம்பாதீர்கள்! கிளிநொச்சியில் ரணில் கருத்து | Ranil Says Do Not Believe Anura Or Sajith

டிஜிட்டல் பொருளாதார உருவாக்கப்படும். கிளிநொச்சி பொறியியல் பீடத்தை சுற்றிலும் அமைந்துள்ள பகுதிகளை மேம்படு்த்துவோம்.

என்னுடைய எதிர்காலத்தைப் பற்றியோ சஜித்துடையதோ அநுரவுடையதோ எதிர்காலத்தைப பற்றியோ சிந்திக்காமல் தத்தமது எதிர்காலத்தையும் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் சிந்தித்துத் தீர்மானியுங்கள்.

அதைப் பற்றி சிந்தித்து சிலிண்டருக்கு வாக்களியுங்கள். தவறினால் சிலிண்டரும் இருக்காது. எதிர்காலமும் இருக்காது” என்றார். 

சஜித்துடன் காலவரையறை தொடர்பில் கலந்துரையாடி அறிவிப்பேன்: மத்திய செயற்குழு கூட்டமும் ரத்து என்கிறார் சுமந்திரன்

சஜித்துடன் காலவரையறை தொடர்பில் கலந்துரையாடி அறிவிப்பேன்: மத்திய செயற்குழு கூட்டமும் ரத்து என்கிறார் சுமந்திரன்

10 வருடங்களுக்கு பின்னர் பலர் பணக்காரராக இருப்பீர்கள்: ரணில் விக்ரமசிங்க

10 வருடங்களுக்கு பின்னர் பலர் பணக்காரராக இருப்பீர்கள்: ரணில் விக்ரமசிங்க

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US