அரசாங்கத்திற்கு ரணில் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை
தற்போதைய அரசாங்கத்திற்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடுமையான எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளார்.
அவசரகால சட்டத்தின் கீழ் மக்களை ஒடுக்க அரசாங்கம் முயற்சித்தால் அதற்கு எதிராக நீதிமன்றின் உதவியை நாட நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களுடன் சூம் தொழில்நுட்பத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவசரகாலச்சட்டத்தின் கீழ் பொருட்களை அத்தியாவசிய சேவையாக அறிவிப்பதில் பிரச்சினையில்லை எனினும் மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
நாளுக்கு நாள் நாட்டின் பொருளாதாரம் பாரிய பின்னடைவை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அரிசி தவிர்ந்த ஏனைய அனைத்து அத்தியாவசிய பொருட்களும் இறக்குமதி செய்யப்படுவதாகவும் தற்பொழுது அந்தப் பொருட்களை இறக்குமதி செய்ய வர்த்தகளிடம் பணமில்லை எனவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
