பட்டலந்தையை விட சுவாரஸ்யமாக மாறிய சர்வதேச விவகாரங்கள்
சர்வதேச விவகாரங்கள் பட்டலந்தையை விட சுவாரஸ்யமாக உள்ளதால் அது தொடர்பில் கருத்து தெரிவிப்பதில் தனக்கு ஈடுபாடு இல்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
நான் எப்போதும் ஜனநாயகம் குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளேன், பட்டலந்த விடயத்தை பொறுத்தவரை நான் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கின்றேன்.
25 வருட அறிக்கை
அதனை பற்றி மேலும் தெரிவிப்பதற்கு எதுவுமில்லை. இது 25 வருட அறிக்கை. ஏனைய அரசாங்கங்கள் அந்த அறிக்கை குறித்து நடவடிக்கைகளை எடுக்கவில்லை .
அதற்கு என்னால் எதுவும் செய்யமுடியாது. நான் இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளேன். இனி எந்த அறிக்கை எதனையும் வெளியிடமாட்டேன்.
மிகவும் அவசியம் என்றால் மாத்திரம் அறிக்கை வெளியிடுவேன். இடம்பெற்ற விடயங்களிற்காக அரசாங்கம் பொதுமக்களிடம் மன்னிப்பு கோரவேண்டும் என பட்டலந்த விசாரணை ஆணைக்குழு எதனையும் தெரிவிக்கவில்லை.
2000 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பல்வேறு கட்சிகள் ஆட்சியிலிருந்தன, நானும் ஆட்சி செய்தேன். எனக்கு பட்டலந்த குறித்து பேசுவதில் தற்போது ஆர்வம் இல்லை சர்வதேச விவகாரங்கள் பட்டலந்தையை விட சுவாரஸ்யமாக உள்ளன , நாடாளுமன்றம் அது குறித்து விவாதிக்கட்டும்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |